வயது ஏற ஏற சில நடிகைகளுக்கு மட்டும் மவுசு கூடிக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு நடிகை தான் அவர். சொல்லப்போனால் அரை நூற்றாண்டு காலத்தை தாண்டி விட்டார். இருந்தாலும் இளம் நடிகைகளுக்கு இன்னமும் டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நடிகையை ரசிகர்கள் செல்லமாக குதிரை என அழைப்பார்கள். சினிமாவில் எந்த அளவுக்கு உச்சம் காட்டி நடிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு நடித்த அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து தற்போதுவரை கெத்தாக வலம் வருகிறார். அதற்காக நடிக்க தெரியாது என்று சொல்ல முடியாது. ஒரு சீன் கிடைச்சாலும் மிரட்டி தள்ளிவிடுவார்.
தமிழில் வயதானாலும் உச்சத்தில் இருக்கும் நடிகர் ஒருவரின் படத்தில் அவருக்கு இணையான வில்லி வேடத்தில் நடித்து மிரட்டி தள்ளினார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அப்பேர்பட்ட நடிகை அக்கட தேசத்தில் ஒரு இயக்குனரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு செட்டிலானார் என்பது தெரிந்த விஷயம் தான்.
ஆனால் அப்படி இரண்டாம் திருமணம் செய்யும் அளவுக்கு அந்த இயக்குனருடன் அவருக்கு என்ன உறவு என்பது தற்போது கசிந்துள்ளது. தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவரை தெலுங்குக்கு அழைத்துச் சென்றவர்தான் அந்த இயக்குனர்.
ஆரம்பத்திலேயே இருவருக்கும் ஒரு மாதிரி செட்டாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுத்து அங்கேயும் முன்னணி நடிகையாக மாறினார். இத்தனைக்கும் அந்த இயக்குனருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தனர். சினிமாவில் இதெல்லாம் சகஜம் தானே.
ஒருகட்டத்தில் இருவரது உறவும் எல்லை மீற திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கு முன்னரே இந்த இயக்குனரால் அந்த நடிகை கர்ப்பமாகி விட்டதாக சொல்கிறார்கள். இந்த விஷயம் மட்டும் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
ஆனால் இந்த விஷயத்தால் தான் அந்த நடிகரின் குடும்பத்தில் பெரிய பிரச்சனை ஏற்பட்டதாம். இந்த நடிகையின் மீது இருந்த மோகத்தால் தன்னுடைய முன்னாள் மனைவியை விவாகரத்து செய்யும் அளவிற்கு துணிந்து, அவருக்கு சுமார் 70 லட்சம் 20 வருடத்திற்கு முன்னரே கொடுத்து செட்டில் செய்து விட்டாராம் அந்த இயக்குனர்.