விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகர் அஸ்வின். இவர் தொடக்கத்தில் ஒரு சில சீரியல்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான். அதன் விளைவாகவே சோசியல் மீடியாக்களில் சுமார் 3 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர். இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில்,
அஸ்வின் பெண்களின் மனதை திருடியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற போஸ்டர் ஆனது அவருடைய ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த போஸ்டரில் பிரேக்கிங் நியூஸ் என்றும் இந்த செய்தியை குறிப்பிட்டுள்ளனர்.
இந்த போஸ்டரை பார்த்ததும் ஷாக் ஆன அஸ்வின் அதன் பின்பு குஷியாகிவிட்டார். பின்பு அந்த போஸ்டரை அஸ்வின் தனது இன்ஸ்ரா ஸ்டோரிலும் ஷேர் செய்துள்ளார். எப்போதுமே சிரித்த முகத்துடன் ரசிகர்களை வசியம் செய்யும் அஸ்வினை பார்த்ததும் பிடித்து விடும்.
தற்போது அஸ்வின் ‘என்ன சொல்லப் போகிறாய்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தில் நகைச்சுவை நடிகராக குக் வித் கோமாளி புகழ் களமிறங்கி உள்ளார்.
எனவே புகழ் அஸ்வின் காம்பினேஷனில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்காக அவர்களுடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். அதேபோல் இன்னும் ஒரு சில படங்களில் அஸ்வின் கமிட்டாகி வருகிறார்.