திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சதீஷ், சன்னி லியோன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ரிலீஸ்.. வாடிவாசல் ஸ்டைலில் இருக்கே!

தமிழ் சினிமாவில் வீரமாதேவி என்ற படத்தின் மூலம் அறிமுகமாக இருந்தவர் சன்னி லியோன். ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்புகள் இழுத்துக் கொண்டே சென்றதால் தற்போது வேறொரு படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.

சன்னி லியோன் அந்த மாதிரி படங்களில் நடித்திருந்தாலும் இந்தி சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து சமீபகாலமாக நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது.

இதனால் நடிகையாக தன்னை மேம்படுத்திக் கொள்ள அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் அதிகம் கவனத்தை செலுத்தி வருகிறார். ஏற்கெனவே விஜய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தாலும் முழு படத்தில் வருவது இதுதான் முதல்முறை.

சன்னி லியோன் தமிழுக்கு வரும் படத்திற்கு ஓ மை கோஸ்ட்(OMG) என பெயர் வைத்துள்ளனர். வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ஹாரர் காமெடி படமான இதில் சன்னி லியோனுடன் காமெடி நடிகர் சதீஷ் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. அதை பார்க்கும்போது சமீபத்தில் சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படத்தின் டைட்டில் போஸ்டர் போலவே இருந்தது.

தற்போது இறுதிக்கட்ட வேலைகளில் பரபரப்பாக இருக்கும் OMG படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ஆனால் தியேட்டரா அல்லது ஓடிடியா என்பதில்தான் குழப்பம் நிலவுகிறது. இந்த படத்திற்கு பிறகு சன்னி லியோன் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

OMG-poster
OMG-poster

Trending News