ஒரு மகனை கஷ்டப்பட்டு பெற்றெடுத்து வளர்த்து சினிமாவில் இவ்வளவு பெரிய நிலைக்கு கொண்டு வந்து விட்டும் இன்னும் அவருக்கு பிரச்சனை முடிந்த பாடில்லை என பெரிய வருத்தத்தில் இருக்கிறாராம் தாடி நடிகர்.
தமிழ் சினிமாவின் ஆல்ரவுண்டர் என பெயர் எடுத்தவர்தான் அந்த நடிகர். அதுவும் அடுக்கடுக்காக வசனம் பேசுவதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. சினிமாவில் சின்ன வேலையில் இருந்து பெரிய வேலை வரை அனைத்தையும் இவர் ஒருவரே செய்யும் அளவுக்கு திறமைசாலி.
அதைப்போல் ஒவ்வொருவரும் ஒரு படத்திற்கு வெளிநாடு போய் தேடித்தேடி லொகேஷன் பார்த்து படம் எடுத்தாலும் இவர் மட்டும் எல்லாத்தையும் செட்டு போட்டு படம் எடுப்பார். இவர் பெண்களை தொட்டு நடித்ததே கிடையாது.
ஆனால் இவரது மகன் அப்படி இல்லை. பெண்களை தொடாமல் ஒரு படத்தில்கூட நடித்ததில்லை. இளம் நடிகராக வலம் வரும் அவர் சமீபகாலமாக தயாரிப்பாளர்கள் வசம் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார்.
யாராவது ஒருவரிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு படம் செய்யாமல் டிமிக்கி கொடுப்பது, தோற்ற படத்திற்கு நியாயம் சொல்வது என தன் பக்கம் நிறைய தவறு இருந்தாலும் அதையெல்லாம் மூடி மறைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அவரை பெற்றோருக்கு தெரியும் அல்லவா நம்மாளு என்னென்ன வேலை செய்துள்ளார் என்று. ஒரு காலத்தில் அப்படி இருந்தாலும் இப்போது அப்படி இல்லை. மகன் பரபரப்பாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் பழைய பிரச்சினைகள் ஒன்று சேர்ந்து மகனின் புதிய படங்களுக்கு தொந்தரவு தருவதால் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார் அந்த தாடி நடிகர்.