சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தியேட்டர்களில் புது படத்தை வெளியிட முக்கிய கண்டிஷன் போட்ட உரிமையாளர்கள்.. OTT தளத்திற்கு ஆப்பு

தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன அதனடிப்படையில் தற்போது தியேட்டர் 50% செயல்படலாம் என கூறியுள்ளனர். ஆனால் தற்போது தியேட்டர் உரிமையாளர்கள் ஒரு சில விதிமுறைகளை கூறியுள்ளனர்.

அதாவது பல நடிகர்களும் தங்களது படங்களை OTT தளத்திற்கு கொடுத்து விடுகின்றனர். அதனால் தற்போது தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை OTT தளத்திற்கு கொடுக்கப்படாமல் இருந்தால் தியேட்டரில் வெளியாகும் என கூறியுள்ளனர்.

தியேட்டரில் படங்கள் வெளியாகி 4 வாரங்களுக்குப் பிறகே OTT தளத்திற்கு கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதாவது தியேட்டர்கள் திறந்தாலும் 50% மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. இதனால் படத்தை சிறிது நாட்களுக்குப் பிறகு OTT தளத்திற்கு கொடுத்தால்தான் தங்களது வியாபாரம் பாதிக்காது எனவும் கூறியுள்ளனர்.

empty-theaters
empty-theaters

பல நடிகர்களும் படத்தில் நடித்துவிட்டு அதனை தியேட்டரிலும் வெளியிட்டு ஒரு வருமானத்தை பெறுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் OTT தளத்திற்கு கொடுத்து வருமானத்தை பெற்று விடுகின்றனர். ஆனால் படத்தை வாங்கும் தியேட்டர் உரிமையாளர்கள் தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என கூறியுள்ளனர்.

சூர்யா OTT தளத்திற்கு பிரபலமாவதற்கு முன்பு அனைத்து படங்களும் தியேட்டருக்கு தான் கொடுத்துக்கொண்டிருந்தார். தற்போது இவரது படங்கள் OTT தளத்திற்கு அதிக வருமானத்திற்கு செல்வதால் இவர் தயாரிக்கும் 4 படங்களையும் தற்போது OTT தளத்திற்கு கொடுத்துள்ளார். இந்த மாதிரி ஆரம்பத்தில் தியேட்டரை நம்பி இருந்த பல நடிகர்கள் தற்போது OTT தளத்திற்கு மாறியுள்ளனர்.

Trending News