கவுண்டமனி செந்திலுக்கு பிறகு திரைப்படங்களின நகைச்சுவை என்கிற பகுதிக்கு சொந்தக்காரர் என்றால் அது சின்னக்கலைவானர் விவேக் மற்றும் வைகைப்புயல் வடிவேலுவையே சேறும்.
ஷங்கரின் 24ம் புலிகேசி படம் தொடர்பான பிரச்சினைக்காக நான்கு ஆண்டுகள் வரை திரையில் வரவே முடியாமல் போனார் வடிவேலு.
என்னதான் படங்களில் வரவில்லை என்றாலும் சமூக வலைகளில் 10ல் ஒரு கமாண்ட் வைகைப்புயலின் மீம்ஸாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் இளைஞர்களால் கொண்டாடப்பட்டவருக்கு இப்போது தான் இம்சை அரசன் பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் லைகா நிறுவனம் எடுக்கும் படத்திற்கு நாய் சேகர் என பெயரிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே காமெடி நடிகர் சதீஷ் நடிக்கும் ஒரு படத்திற்கு இந்த தலைலப்பு வைக்கப்பட்டுவிட்டதோடு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்து விட்டது.
இந்நிலையில் நாய் சேகர் என்கிற கேரக்டரே நடிகர் வடிவேலுவுக்கு தலைநகரம் படத்தில் வைக்கப்பட்ட கதாப்பாத்திர பெயர் என்பதால் அந்த தலைப்பை வாங்குவதில் மெனக்கடுகிறது படக்குழு.
ரசிகர்களோ படத்தின் தலைப்பா முக்கியம் படத்தில் தலைவன் தான் முக்கியம் என கூறிவருகின்றனர்.