செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

எனக்கு ஜோடி யார் என்பதை நான்தான் முடிவு செய்வேன்.. அழிச்சாட்டியம் செய்யும் முட்டை நடிகை

சினிமாவில் ஆரம்பத்தில் சரியான கதாபாத்திரம் கிடைக்காமல் தடுமாறி கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அவ்வப்போது சினிமாவில் தலைகாட்டி வந்தார். ஆனால் அந்த நடிப்பு நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் இருவரும் தயாரித்த முட்டை படம் அந்த நடிகைக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து நடிகைக்கு முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகள் முதற்கொண்டு கிடைக்க ஆரம்பித்தது. ஏன் அந்த நடிகரே தன்னுடைய லோக்கல் படத்தில் வாய்ப்பு கொடுத்து அவரை உயர்த்தி விட்டார்.

அதன் விளைவு தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் சோலோ ஹீரோயின் படங்களில் முதல் சாய்ஸாக இருப்பது அந்த நடிகை தான். அந்த வகையில் சமீபத்தில் போலீசாக நடித்த படம் செம வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இந்த நடிகை பிரபலமாக ஆரம்பித்தபோதே கொஞ்சம் சீன் போடுகிறார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரங்களில் வந்தது. அது தற்போது உறுதியாகி விட்டதாம்.

தற்போது தான் நடிக்கும் படங்களில் யார் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதையே இவர்தான் தீர்மானம் செய்கிறாராம். அப்படி இல்லை என்றால் வேறு நடிகையை பார்த்துக்கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர்களிடம் கறார் காட்டி வருகிறாராம்.

ஒரு காலத்தில் கண்டுகொள்ள ஆளில்லை. இப்போது கொஞ்சம் காசு பணம் பார்த்ததும் திமிரு அதிகமாகி விட்டதாம். அந்த நடிகையின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் எதுவும் சொல்ல முடியாத நிலைமை என தயாரிப்பாளர்கள் வருத்தப்படுகிறார்களாம்.

Trending News