புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சசிகலாவாக நான் தான் நடிப்பேன் என அடம்பிடித்த பிரபல நடிகை.. சர்ச்சையாகும் என எச்சரித்த நபர்கள்

இன்று வெளிவந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தைப்பற்றி சற்றே நம்மோடு கலந்து கொண்டார் பிரபல நடிகை. தமிழில் முணியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் அறிமுகமானவர் இந்த நடிகை. தெலுங்கு மலையாளப்படங்களில் சில ஹிட்கள் கொடுத்திருந்தாலும் தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஜொலிக்கவில்லை.

தலைவி படத்தில் சசிகலா ரோலில் நடிக்கும் நடிகை பூர்ணா தனக்கு அப்படி ஒரு ரோல் கிடைக்கும் என எதிர்பாராத தருணத்தில் இயக்குனர் விஜய் போன் செய்து அழைத்தார். எனக்கோ இப்படி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது பலநாள் ஆசை என்றும் கூறினார். அவர் அந்த ரோல் மற்றும் படத்தில் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்கிற விடயங்களை என்னிடம் கூறவே நானும் சட்டென ஒப்புக்கொண்டேன்.

ஆனால் என் தோழிகளோ என்னை சசிகலா வேடத்தில் நடிக்க வேண்டாம் என்றும் பல்வேறு பிரச்சினைகளை நீ சந்திக்க நேரலாம் என்றும் அறிவுரை கூறினார்கள். ஆனால் எனக்கோ இது ஒரு அற்புதமான வாய்ப்பாகவே தெரிந்தது என்ன நடந்தாலும் பரவாயில்லை என விஜய் சார் மீது பாரத்தை போட்டு நடித்தும் கொடுத்துவிட்டேன்.

ஆனாலும் அதில் என் தோழிகள் குறிப்பிட்டது போல் இல்லாமல் கதைக்கு தேவையான விடயங்களை மட்டுமே வைத்து இயக்கியுள்ளார் விஜய் என்றும் குறிப்பிட்டார். மேலும் சிறு வயதிலிருந்தே தனக்கு விருப்பமான நடிகை கங்கனா ரணவாத்துடன் இணைந்து நடித்தது எனக்கு மேலும் ஒரு சந்தோசத்தை தந்துள்ளது என்றும் கூறினார்.

என்னதான் மாற்று மொழிகளில் ஹிட் கொடுத்தாலும் எனக்கு தமிழில் ஹிட் கொடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு என்கிறார் இயக்குனர் ராம் நடிப்பில் வந்தசவரக்கத்தி மற்றும் அருள்நிதி நடிப்பில் வந்த தகராறு படங்களில் எனது கேரக்டர் பேசப்பட்டாலும் வியாபார ரீதீயில் பெரும் லாபம் பெற்று ஹிட் படமாகா மாற்ற முடியவில்லை என்றும் கூறினார்.

என்னவாக இருந்தால் என்ன நமது கடமையை சரியாக செய்து முடிப்பதோடு நமது பணி முடிவடைந்து விடுகிறது என்றார். மேலும் தனக்கு நடிகர் விஜய் தான் மிகவும் பிடித்த நடிகர் என்றும் எனது முதல் படமான முணியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு  படத்தின் ஆடியோ லாஞ்சிற்கு விஜய் வந்தது எனக்கு மிக சந்தோசத்தை தந்தது என்றும் கூறினார்.

thalaivi-poorna
thalaivi-poorna

சரி சசிகலாவின் ரோல் படத்தில் எப்படி என கேட்டதற்கு குறைந்த நேரம் மட்டுமே வந்து செல்வதாகவும் அம்மாவின் தோழியாக தோழமையும் தேவையான அளவு காட்டப்பட்டிருப்பதாகவும் கூறினார். இப்போது தமிழ் சினிமா அரசியல் பிரபலங்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் சசிகலா ரோலின் டுவிஸ்டுகளை போட்டு உடைத்துள்ளார் நடிகை பூர்ணா.

Trending News