சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சிங்க முகத்துடன் மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா.. சிவகார்த்திகேயன் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பிரபல இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா நடிகராக அவதாரம் எடுத்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

தல அஜித் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம் ‘வாலி’. இதில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். இப்படத்தின்மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா. அஜித் எப்போதுமே தன்னுடைய படங்களில் திறமையாக வேலை செய்யும் உதவி இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்.

இப்படித்தான் உதவி இயக்குனராக இருந்த சரணுக்கு தொடர்ச்சியாக நான்கு படங்களில் வாய்ப்பு கொடுத்தார். வசந்த் இயக்கிய ‘ஆசை’ படத்தில் அஜித் நடித்துக் கொண்டிருந்தபோது அதில் உதவி இயக்குனராக இருந்தார் எஸ்.ஜே.சூர்யா. அப்போது அவரது கடின உழைப்பை பார்த்த அஜித், அவருடன் ஒரு படம் பண்ணுவதாக உறுதியளித்திருந்தார்.

இதன்பின் உருவானதுதான் ‘வாலி’ படம். இதுபற்றி எஸ்.ஜே.சூர்யாவும் பல பேட்டிகளில் கூறியுள்ளார். வாலி படத்தையடுத்து குஷி, நியூ, அன்பே ஆருயிரே என பல படங்களை இயக்கியிருந்த எஸ்.ஜே.சூர்யா, அதன்பின் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார்.

கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி என பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த ‘நெஞ்சம் மறப்பதிலை’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நாயகியாக நந்திதா, ரெஜினா ஆகியோர் நடித்திருந்தனர்.

தற்போது இவர் ‘கடமையை செய்’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். யாஷிகா ஆனந்த் நாயகியாக நடித்துவரும் இப்படத்தை வெங்கட் ராகவன் என்பவர் இயக்கி வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று வெளியிட்டார்.

 

siva-sj-suriya-poster
siva-sj-suriya-poster

அந்த போஸ்டரில் பாதி சிங்க முகமும், பாதி எஸ்.ஜே.சூர்யா முகமும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தப்படம் தவிர எஸ்.ஜே.சூர்யா ‘மாநாடு’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

Trending News