வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வரலாற்று படத்தை இயக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் உருவாகும் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் சினிமா துறையில் சிறந்த வரைகலை நிபுணராகவும், இயக்குனராகவும் இருந்து வருகிறார். பல திரைப்படங்களை வடிவமைத்துள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆக்கர் பிக்சர் புரோடக்சன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். ஆரம்பகாலத்தில் வரைகலை வடிவமைப்பாளர் ஆக இருந்தவர் கோவா திரைப்படத்தினை முதன்முதலாக தயாரித்து அதன் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் மாறினார்.

அதைத்தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் திரைப்படத்தை இயக்கினார் .மேலும் இத்திரைப்படத்தின் வரைகலை வடிவமைப்பாளர் ஆகவும் இருந்தார். பல திரைப்படங்களில் தலைப்புகளை மட்டும் வடிவமைத்து உள்ளார்.

படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜி போன்ற ரஜினியின் திரைப்படங்களுக்கு பிரத்தியேக தலைப்புகளில் வடிவமைப்பை கணினி கிராபிக்ஸில் வடிவமைத்திருந்தார்.

சௌந்தர்யாவின் மற்றுமொரு மெகா படைப்பாக உருவாகி வருகிறது. பொன்னியின் செல்வன் வெப்சீரிஸ் புதுவெள்ளம் என்ற பெயரில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் அதே பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் பொன்னியின் செல்வன் வெப்சீரிஸ் பற்றிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். எம்.எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சௌந்தர்யா இந்த வெப்சீரிஸ் தயாரிக்கிறார். சரத் ஜோதி அவர்கள் இயக்குகிறார். ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தை எதிர்பார்க்கும் இந்த நேரத்தில் இப்போது வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு மற்றும் ஒரு மகிழ்ச்சியான தகவலாக இருந்து வருகிறது.

Trending News