புதன்கிழமை, ஜனவரி 22, 2025

தன் காதலரை செல்லப் பெயர் வைத்து அழைத்த நயன்தாரா.. லவ் பண்ணா இப்படியெல்லாம் தோனுமோ!

தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகையாக வளர்ந்து நிற்பவர் நடிகை நயன்தாரா. ஐயா படத்தின் செல்வியாக துவங்கி தயக்கத்தோடு நிற்கும் ஒரு ஒரு அசைவும் அட்டகாசமான படைப்பாற்றலை பெற்றுத்தந்தது. ஆரம்பித்த அடுத்தடுத்த படங்களிலேயே சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டார்.

இப்போது அவரே லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் வெகுவாய் கொண்டாடப்படும் நடிகை நயன் தாரா இப்போது அதிகமாய் தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்தும் வருகிறார்.

தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்கிற தலைப்பில் ஒரு படம் நடித்தும் வருகிறார். இருவரும் இணைந்த நானும் ரவுடிதான் படம் மெகா ஹிட் படமாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் விக்னேஷ் மற்றும் நயன் இணையும் இரண்டாவது படமாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் அமைகிறது. மீண்டும் நயன்தாராவுடன் கூட்டணி போடும் நடிகர் விஜய் சேதுபதி, சமந்தா உடன் முதல் முறையாக கூட்டணி வைக்கிறார். இந்த படத்தின் முதல் டிராக் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி வெளியாகி வைரலானது.

nayanthara vignesh shivan
nayanthara vignesh shivan

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது டிராக் டூ டூ டூ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த டூ டூ டூ வருகிற செப்டம்பர் 18ல் வெளியிடுவதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நயன்தாரா.

மேலும் அதில் அன்பான டைரக்டர் விக்னேஷ் சிவன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பல தரப்புகளிலிருந்தும் கமாண்டுகள் வந்து கொண்டிருக்கிறது. அதிலும் அதிகமாய் கல்யாணம் எப்போது என்று பல பாசிட்டிவ் கேள்விகள் எழுந்து வருகிறது. ஆனால் நயன்தாரா அவை எவற்றுக்கும் பதிலளித்ததாய் தெரியவில்லை.

Trending News