பெயரிலேயே ராணி வைத்துள்ள அந்த நடிகை ஆரம்பகாலத்தில் தமிழ் சினிமாவில் ராணியாகவே வலம் வந்தார். பார்ப்பதற்கு அழகாக கொழுக் மொழுக்கென இருப்பதால் அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வந்தது. முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், பல இளம் நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவரை தேடி வந்தது.
இவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், மினிமம் கியாரண்டி வெற்றி பெற்று ஓரளவிற்கு பெயர் பெற்று வந்தார். ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. கோலிவுட்டில் ராணியாக வலம் வந்த அந்த நடிகைக்கு தற்போது வாய்ப்பு கொடுக்க அனைவரும் யோசிக்கிறார்களாம்.
இதற்கு முக்கிய காரணம் அந்த அடல்ட் காமெடி படத்தில் நடித்ததுதான் என்கிறார்கள். இதுவரை காமெடி படங்களில் மட்டுமே ஹீரோயினாக கலக்கி வந்த அந்த நடிகைக்கு காமெடி கலந்த அடல்ட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வந்த வாய்ப்பை ஏன் விடவேண்டும் என்று நினைத்த அந்த நடிகை அதற்கும் ஓகே சொல்லி நடிக்க ஆரம்பித்தார். அதோடு அவருக்கு வந்த வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது.
ஆனால் உண்மையில் அடல்ட் காமெடி படத்தில் நடித்தது மட்டும் இவரது வாய்ப்பு பறிபோக காரணம் இல்லையாம். இவரது சொந்த அக்காவின் கைது நடவடிக்கை தான் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய காரணம் என பேச்சு அடிபட்டு வருகிறது. சமீபத்தில் போதைப் பொருள் விவகாரத்தில் ராணி நடிகையின் அக்கா நடிகை கைது செய்யப்பட்டது மிகப்பெரிய பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் சிலர் தங்கைக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கு என கிளப்பி விடவே இவரை கோலிவுட்டில் புக் செய்வதை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தவிர்க்க ஆரம்பித்தனர்.
தன் சொந்த அக்காவே தனது சினிமா வாழ்க்கைக்கு ஆப்பு வைத்துவிட்டதை எண்ணி ராணி நடிகை புலம்பி வருகிறாராம். மேலும் எப்படியாவது வாய்ப்பு பெற்றுவிட வேண்டும் என்று அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.