புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பயங்கர எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய ஜீ தமிழ் சர்வைவர்.. 18 போட்டியாளர்களின் மொத்த லிஸ்ட் இதோ

ஒவ்வொரு முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களும் மக்களை எண்டர்டெயின் செய்யும் விதமாக பல புதிய புதிய ரியாலிட்டி ஷோக்களை வழங்கி வருகிறார்கள். இதில் முதலாவதாக இருப்பது விஜய் டிவி தான். தற்போது மக்களின் ஃபேவரைட் நிகழ்ச்சியான பிக்பாஸ் 5 விரைவில் தொடங்க உள்ளது. ஏற்கனவே டிஆர்பியில் முதல் இடத்தில் உள்ள விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சொல்லவா வேண்டும்.

இந்நிலையில் விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழ் களத்தில் இறக்கியுள்ள நிகழ்ச்சி தான் சர்வைவர். நேற்று ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த 16 பேர் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.

போட்டியாளர்கள் அனைவரும் ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு தனி தீவில் 90 நாட்கள் இருக்க போகின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவார். இறுதி வரை தாக்குப்பிடித்து வெற்றி பெறும் போட்டியாளருக்கு ஒரு கோடி ருகபாய் பரிசு வழங்கப்படும்.

தற்போது சர்வைவர் தமிழ் போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி பெசன்ட் ரவி, லக்கி நாராயண், அம்ஜத் கான், விஜே பார்வதி, லக்ஷ்மி ப்ரியா, லேடி கேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, காயத்ரி ரெட்டி, உமாபதி ராமையா, விக்ராந்த், விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யா, சரண், நந்தா, ராம். சி, இந்திரஜா, ரோபோ ஷங்கர் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டிருக்கின்றனர்.

முதல் நாளிலேயே போட்டியாளர்களிடம் இருந்து செல்போன் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பெறப்பட்டு விட்டது. மேலும் போட்டியாளர்கள் அனைவரும் காடர்கள் மற்றும் வேடர்கள் என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர முதல் போட்டி என்ன என்பது குறித்த ப்ரோமோவும் வெளியாகியுள்ளது.

survivor-list
survivor-list

அதாவது இரண்டு அணிகளும் கடலுக்கு நடுவில் நிறுத்தப்பட்டுள்ள படகிற்கு சென்று அங்கு இருக்கும் காய்கறிகளை கொண்டு வர வேண்டும். முதல் போட்டியே மிகவும் கடுமையாக இருப்பதால் யார் ஜெயிப்பார்கள் என தெரியவில்லை. மேலும் இந்நிகழ்ச்சிக்கு பின்னர் ஜீ தமிழ் டிஆர்பியில் முதல் இடத்திற்கு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News