சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

சந்தானம் போன்ற ஹீரோக்களை வைத்து இயக்கினாலும் சம்பளம் குறைவு தான்.. மேடையில் புலம்பிய பிரபலம்

சந்தானத்தை வைத்து ‘தில்லுக்கு துட்டு – 1’ மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கியவர் இயக்குனர் ராம் பாலா. காமெடி ஹாரர் பாணியில் உருவாகியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இவர் தற்போது ‘இடியட்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நடிகையாக நிக்கி கல்ராணி நடித்து வருகிறார். மேலும் ஆனந்தராஜ், ஊர்வசி, ரவி மரியா, சிங்கமுத்து ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விக்ரம் செல்வா என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர் ராம்பாலா, ‘எல்லோரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது முட்டாள் தனமாக நடந்து கொள்வார்கள். அப்படி நடந்து கொள்பவர்களைப் பற்றிய படம் தான் இது’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மற்ற பேய் படங்களை போல் இல்லாமல் குழந்தைகளோடு பார்க்க கூடிய பேய் படமாக இப்படம் இருக்கும். அனைத்து விதமான மக்களை கவரும் வகையில் இப்படம் இருக்கும். நான் இதுவரை பேய் படங்களை மட்டுமே எடுத்துள்ளேன்.

அதனால் இயக்குனர்கள் என்னை பேய்ப் படம் மட்டுமே எடுக்க வற்புறத்துகிறார்கள் என்றார். மேலும், காமெடி படம் எடுக்கும் இயக்குnர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது என அவர் குற்றம் சாட்டினார்.

ram-bala
ram-bala

சினிமாவில் காமெடி படம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று, காமெடி படங்களை இயக்குபவர்களுக்கு மத்திய அரசு தனியாக விருது வழங்க வேண்டும் என்றும் கூறினார். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News