சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ரெண்டு காலில் கட்டு, யூரின் பேக் உடன் பரிதாப நிலையில் யாஷிகா.. கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மாடல் அழகி யாஷிகா ஆனந்த், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை-மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளார். இந்த விபத்தில் அவருடைய தோழியான பவானி என்ற பெண் பலியானார்.

இதனால் யாஷிகாவின் மீது, காரை வேகமாக ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதியப்பட்டது. கார் விபத்து ஏற்பட்ட பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் புகைப்படங்களை அழித்தார் யாஷிகா ஆனந்த்.

இதைத்தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன்முதலாக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் யாஷிகா. அதில் தன்னுடைய தோழி பவானியை மிஸ் பண்றேன் என்றும், தன்னுடைய இடுப்பு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும்,

இன்னும் 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது என்றும், இயற்கை உபாதை கூட படுக்கையில் தான், நல்லவேளை முகத்தில் எந்த காயமும் ஏற்படவில்லை என்று தன்னுடைய மனதை தேற்றிக் கொண்டுள்ளார் யாஷிகா. கோரமாக நடைபெற்ற கார் விபத்திற்குப் பின்பு தற்போது முதல் முதலாக தனது புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் யாஷிகா.

yashika-cinemapettai1
yashika-cinemapettai

இதில் காலில் கட்டுப்போட்டுக் கொண்டு படுத்த படுக்கையாக காட்சியளிக்கிறார். அத்துடன் எழுந்து சென்று சிறுநீர் போவதற்குக் கூட வலி இல்லாமல், யூரின் பேக் போட்டுள்ளார். அவர் கூடவே அவருடைய செல்லப்பிராணி குட்டி நாய் ஒன்று உள்ளது.

மேலும் யாஷிகா ஆனந்த் அம்மா யாஷிகாவிற்கும் உணவு நீட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அவருடைய ரசிகர்கள் யாஷிகாவை தேற்றும் விதத்தில் ஆதரவான கமெண்ட்டுகளை பதிவிடுகின்றனர்.

yash-cinemapettai1
yash-cinemapettai

Trending News