புதன்கிழமை, ஜனவரி 22, 2025

விக்னேஷ் சிவன் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய நயன்தாரா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது வரை பல படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழில் அவரது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் எனும் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதுதவிர ஹிந்தியில் முன்னணி நடிகர் ஷாருக்கானுடன் புதிய படம் ஒன்றிலும் நயன்தாரா நடித்து வருகிறார்.

ஷாருக்கான் – நயன்தாரா இணையும் இப்படம் தான் நயன்தாராவிற்கு பாலிவுட் சினிமாவில் அறிமுக படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெற்றியை பொறுத்து நயன்தாரா பாலிவுட் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

vignesh shivan
vignesh shivan

இன்று இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் விக்னேஷ் சிவனின் காதலியும், பிரபல நடிகையுமான நயன்தாரா அவரது காதலர் பிறந்தநாளை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடி உள்ளார். தற்போது இந்த பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக சமீபத்தில் நடிகை நயன்தாராவின் தாயார் பிறந்தநாள கொண்டாடப்பட்டது. அப்போது நயன்தாரா தாயாரின் பிறந்தநாளை முன்னிட்டு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கேரளாவிற்கு நேரில் சென்று அவரது அம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். தனது மாமியார் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News