சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

நேருக்கு நேராக மோதிக்கொள்ளும் தல, தளபதி படங்கள்.. இதுவரை யாருக்கு அதிக வெற்றி தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரு நடிகர்களுடன் போட்டிகள் இருந்து கொண்டே இருக்கும். பிளாக் அண்ட் வொயிட் காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி 80’s காலக்கட்டத்தில் ரஜினி, கமல் 90’s விஜய், அஜித்.

விஜய் மற்றும் அஜீத் நேருக்கு நேர் மோதிக்கொண்ட படங்கள், 1996இல் விஜய்க்கு கோயமுத்தூர் மாப்பிள்ளை மற்றும் அஜித் வான்மதி படமும் ஒரே நாளில் வெளியானது. இந்த இரு படங்களுமே 100 நாள் தாண்டி வெற்றிப் படமாக அமைந்தது. அதே ஆண்டே மீண்டும் இருவரது படமும் வெளியாகியது. விஜய்யின் பூவே உனக்காக 150 நாட்கள் தாண்டி ஓடியது. பூவே உனக்காக ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது பெரும் அதிஷ்டம் தான். கல்லூரி வாசலில் பிரசாந்த் ஹீரோவாக நடித்து இருப்பார், அஜித் இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார், இப்படம் படுதோல்வி அடைந்தது.

1999இல் அஜித் நடித்து வெளியான உன்னைத்தேடி படம் ஓரளவு வெற்றி பெற்றது. விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்த ஆண்டு மிகப்பெரிய வசூல் பெற்ற படமாக துள்ளாத மனமும் துள்ளும் இருந்தது. 2000ம் ஆண்டு எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் விஜய்யின் குஷி படம் வெளியானது. இப்படம் பயங்கரமான வெற்றிப்படமாக இருந்தது, இப்படத்துடன் போட்டி போட்ட அஜித்தின் உன்னை கொடு என்னை தருவேன் படம் படு தோல்வியடைந்தது.

2002ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான பிரண்ட்ஸ் மற்றும் தீனா படங்கள் 100 நாள் தாண்டி வெற்றி படமாக இருந்தது. அஜித்தை மாஸ் ஹீரோவாக மாற்றிய படம் தீனா. இப்படமே அஜித்தை தல என அழைக்க காரணம். அதே ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்தது அஜித்தின் வில்லன், விஜய்யின் பகவதி. பகவதி படம் படு தோல்வி அடைந்தது. வில்லன் படம் 150 நாட்களை தாண்டி மிகப் பெரிய வெற்றிப் படமாக இருந்தது.

verithanam-ajith-vijay
verithanam-ajith-vijay

2003 ல் விஜய் ஆக்சன் ஹீரோவாக மாற்றிய திருமலை படம் 150 நாள் தாண்டி வெற்றி பெற்றது. அஜித்தின் ஆஞ்சநேயா படம் பிளாப் ஆனது. மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய், அஜித் படங்கள் ஆதி,பரமசிவன் ஒன்றாக வெளியாகிறது. இரு படங்களுமே தோல்வியை சந்திக்கிறது.

2007ல் பொங்கலுக்கு வெளியான விஜய்யின் போக்கிரி படம் தாறுமாறான வெற்றியை பெறுகிறது. அஜித்தின் ஆழ்வார் படம் மோசமான தோல்வி அடைந்தது. 2014இல் நாளில் வெளியான ஜில்லா மற்றும் வீரம் விஜய்,அஜித் இருவருக்கும் வெற்றிப் படமாக அமைந்தது.

7 வருடங்களுக்குப் பிறகு 2022 பொங்கலுக்கு அஜித்தின் வலிமை, விஜயின் பீஸ்ட் படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. போனி கபூர் வலிமை படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். பீஸ்ட் திரைப்படம் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு எடுக்கப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்தவுடன் பீஸ்ட் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் சன் பிக்சர்ஸ் இடமிருந்து எதிர்பார்க்கலாம்.

- Advertisement -spot_img

Trending News