வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஹீரோக்களுக்கு பதில் இந்த குரங்கை நம்பலாம்.. ஹாலிவுட் தரத்தில் உருவாகும் முருகதாஸ் படம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஏ ஆர் முருகதாஸ். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே பெரிய அளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்து உள்ளன. ஒரு காலத்தில் ஏ ஆர் முருகதாஸ் படம் வெளியானால் எந்த இயக்குனரும் தங்களது படங்களை வெளியிட மாட்டார்கள். அந்த அளவிற்கு அனைத்து இயக்குனருக்கும் பயத்தை காட்டி வைத்திருந்தார் ஏ ஆர் முருகதாஸ்.

ஆனால் சமீபத்தில் இவரது இயக்கத்தில் ஒரு சில படங்கள் மட்டுமே பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை ஆனால் வசூலை வாரி குவித்தது. தற்போது ஏ ஆர் முருகதாஸ் குரங்கு வைத்து படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். பல வருடங்களாக இயக்குனராக இருக்கும் ஏ ஆர் முருகதாஸ் சினிமாவிற்காக முதல் முதலில் எழுதிய கதையும் இதுதான் என கூறியுள்ளனர்.

அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. மேலும் ஜுராசிக் பார்க் படத்தில் பயன்படுத்தப்பட்ட அனிமெட்ரானிக்ஸ் என்ற தொழில்நுட்பத்தை இப்படத்தில் பயன்படுத்தியுள்ளார். அதாவது ஜுராசிக் பார்க் படத்தில் ஜுராசிக் விலங்குகள் ரப்பர் வைத்து உருவாக்கிய டெக்னாலஜி முறையில் படத்தை எடுத்திருந்தனர். தற்போது அதேமுறையில் ரப்பர் பயன்படுத்தி குரங்கை வைத்து எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ar-murugadoss-cinemapettai
ar-murugadoss-cinemapettai

மேலும் இப்படத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை டெல்லியின் பிரபல தயாரிப்பு நிறுவனமான த்ரீசம் ப்ரொடக்ஷன்  நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இப்படத்தில் பல தொழில்நுட்ப கலைஞர் இணைந்து உள்ளதாகவும் ஹாலிவுட் தரத்தில் இப்படத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏ ஆர் முருகதாஸ் இப்படத்தை எடுக்க இருப்பதால் கண்டிப்பாக ஹாலிவுட் தளத்திற்கு இப்படம் பேசப்படும் என பலரும் கூறி வருகின்றனர். ஆக மொத்தம் பட பூஜையில் குரங்கு வந்தாலும் ஆச்சரிமில்லை.

Trending News