வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

முதல் மரியாதை படத்தில் நடிக்கயிருந்த பிரபல நடிகர்.. இருந்தாலும் சிவாஜி அளவுக்கு நடிப்பது கஷ்டம் தான்.!

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் சிவாஜி கணேசன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. ஒரு கட்டத்திற்கு பிறகு சிவாஜி படத்தை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்றனர்.

சிவாஜி கணேசனின் நடிப்பிற்கு உலக அளவில் ரசிகர்கள் இருந்தனர். சிவாஜி கணேசனின் நடிப்பை பார்த்து வியக்காத நடிகர்கள் இல்லை என்றுதான் கூறவேண்டும். தற்போது வரை நடிப்பு என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது சிவாஜி கணேசன் மட்டுமே.

சிவாஜி கணேசன் நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அதில் ஒன்று தான் முதல் மரியாதை திரைப்படம். இப்படத்தில் சிவாஜி கணேசன் நடிப்பு படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. அதிலும் இவர் பேசும் வசனங்களும் இவரது நடிப்பு பாவனைகளும் படத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

sp balasubramaniam
sp balasubramaniam

ஆனால் முதல் மரியாதை திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்கு பதிலாக எஸ்பிபி நடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பின்பு ஏதோ ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது. அதனால் சிவாஜிகணேசன் இப்படத்தில் கதாநாயகனாக ஏற்று நடித்துள்ளார். இப்படம் வெளிவந்த பிறகு சிவாஜி கணேசன் நடிப்பை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்படத்தை சிவாஜி கணேசனை தவிர வேறு எந்த நடிகராலும் நடிக்க முடியாது என பலரும் புகழ்ந்தனர்.

அதுமட்டுமில்லாமல் எஸ்பிபி படத்தில் நடித்திருந்தாலும் சிவாஜி கணேசன் அளவிற்கு தனது நடிப்பை காட்டி இருப்பாரா என்பது தெரியவில்லை எனவும் அப்போது பலரும் பேசி வந்தனர். ஆனால் முதல் மரியாதை திரைப்படம் பல வருடங்களுக்கு முன்பு வெளியாகியும் இன்றுவரை பேசுவதற்கு காரணம் சிவாஜி கணேசன் நடிப்புதான். அந்த அளவிற்கு தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

Trending News