விஜய் டிவியில் தற்போது டிஆர்பியில் நம்பர் ஒன்னில் உள்ள சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இத்தொடரின் இயக்குனர் பிரவீன், ஹீரோயின் கண்ணம்மாவை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தொடர் பாரதி கண்ணம்மா.
பாரதிகண்ணம்மாவில் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் ரோஷினி ஹரிப்ரியன் ஒரு மாடலாக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியுள்ளார். இத்தொடரில் அவருடன் அருண்பிரசாத், ரூபாஸ்ரீ, ரிஷி தேவ் மற்றும் பரினா நடித்துள்ளனர்.
ஒரு பெண் தனியாக ஒரு பெண் குழந்தையை இச்சமூகத்தில் வளர்ப்பது எவ்வளவு கடினமானது என்பதை இக்கதை எடுக்கப்பட்டுள்ளது. பாரதிகண்ணம்மா தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
பாரதி கண்ணம்மாவில் ரோஷினி புடவை அணிந்து, அதிகம் மேக்கப் இல்லாமல் இயல்பாக நடித்திருப்பார். இதற்காகவே இவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இதில் இவரை ‘சமையல் அம்மா’என்று குழந்தைகள் அழைப்பது சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டது.
ரோஷினி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இவர் மாடலாக உள்ளதால் அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். தற்போது அம்மன் வேடத்தில் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார்.
இது பாரதிகண்ணம்மா தொடருக்காக எடுக்கப்பட்டதா அல்லது போட்டோ ஷூட் என்பது தெரியவில்லை. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி இவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.