வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. வெளியான அதிரடி அப்டேட்.!

மாநகரம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான கைதி படமும் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் புதிய கதை களத்துடன் வெற்றி படங்களை வழங்கி வந்த லோகேஷ் அனைவரின் கவனத்தையும் அவர் பக்கம் திருப்பினார்.

அடுத்ததாக இவர் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படமும் வெற்றி பெற்றது. இயக்குனராக அறிமுகமான 3வது படமே தளபதி விஜய்யை வைத்து இயக்கியதால் பிரபல இயக்குனராக அறியப்பட்டார். தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார்.

இப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, ஷிவானி நாராயணன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் படம் குறித்த புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது விக்ரம் படத்தை இரண்டு பாகங்களாக இயக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம். விக்ரம் படத்தின் கதையை தயார் செய்யும் போதே விரிவாக தயார் செய்த லோகேஷ் கதையை சுருக்க விரும்பாததால், அப்படியே படமாக்க நினைத்துள்ளார்.

vikram-cinemapettai
vikram-cinemapettai

ஆனால் படத்தின் நேரம் கருதி தற்போது இரண்டு பாகங்களாக எடுத்து விடலாம் என முடிவு செய்துள்ளாராம். எனவே விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் என ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்த தகவல் கமல் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது என்று தான் கூற வேண்டும். சீக்கிரமே ஒரு தரமான சம்பவம் நடைபெற உள்ளது.

Trending News