விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த சில நாட்களாகவே விறுவிறுப்பாகவும், எதிர்பார்ப்புடனும் போகிறது. அதில் லட்சுமி அம்மாவின் இறப்பும், அதற்கான சடங்குகளின் காட்சி அமைப்பும் நிகழ்வு போலவே மிகவும் யதார்த்தமாக அமைந்தது அனைவரின் கவனத்தையும் பெற்றது.
அந்தக் காட்சியில் நடித்த நடிகை ஷீலாவின் நடிப்பும் அவரின் பங்களிப்பும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகை ஹேமா தனது யூடியூப் சேனலில் லட்சுமி அம்மாவின் இறப்பிற்காக உருவாக்கப்பட்ட டம்மி பொம்மையை காண்பித்தார்.
அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது மேலும் அந்த காட்சியில் லட்சுமி அம்மாவிற்கு பதில் இந்த பொம்மை தான் பயன்படுத்தப்பட்டது என்ற செய்தியும் பரவி வருகிறது.
இதனை கண்ட ஹேமா தற்போது தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அதாவது லக்ஷ்மி அம்மாவின் இறப்பிற்காக அந்த பொம்மை உருவாக்கப்பட்டது உண்மைதான் ஆனால் படப்பிடிப்பின் போது எந்த காட்சியிலும் அதை நாங்கள் பயன்படுத்தவில்லை.
பாடையில் வைக்கப்படும் காட்சி, சுடுகாட்டில் எடுக்கப்பட்ட காட்சி அனைத்திலும் கஷ்டப்பட்டு நடித்தது ஷீலா அம்மா தான். தயவு செய்து யாரும் அவருடைய உழைப்பை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இந்த காட்சி படமாக்கப்பட்ட பிறகு பிணமாக நடித்த ஷீலா அம்மாவுக்கு முறைப்படி பரிகார சடங்கு செய்யப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.