ரோஷினி, அருண் பிரசாத், ரூபஸ்ரீ மற்றும் பலர் நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் அவ்வப்போது பல சுவாரஸ்யங்களும் நடக்கத்தான் செய்கின்றன.
அவ்வகையில் கண்ணம்மா வீட்டை விட்டு நடந்து செல்வது போன்ற காட்சியை பல நாட்களாக ஒளிபரப்பப்பட்டது. இதில் கடுப்பான ரசிகர்கள் “அப்படி எங்கதாமா போற” என்று கேட்கும் அளவுக்கு கலாய்த்து தள்ளினர். அவ்வாறு நடந்தே நிலாவுக்கு சென்ற பெருமையும் கண்ணம்மாவிற்கு உண்டு.
தற்பொழுது இந்த சீரியலின் கதைகளம் மருத்துவமனையை சுற்றியே நடந்து வருகிறது. கதாநாயகியான கண்ணம்மாவிற்கு லங்ஸ்-ல் இருக்கும் பிரச்சினை காரணமாக அடிக்கடி மருத்துவமனைக்கு செல்கிறார்.
மாமியார் சௌந்தர்யாவோ அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு பிபி எகிறி மருத்துவமனையில் அட்மிட் ஆகி விடுகிறார். தற்பொழுது கர்ப்பமாக இருக்கும் கண்ணம்மாவின் தங்கையான அஞ்சலிக்கு கர்ப்பப்பையில் பிரச்சனையாம் அதனால் அவரும் மருத்துவமனைக்கு செல்கிறார்.
இது போதாதென்று கண்ணம்மாவின் இரட்டைக் குழந்தைகளான ஹேமா மற்றும் லக்ஷ்மி இவர்களுக்கும் வயிற்று வலி, தலைவலி என்று மயங்கி விழுந்து விடுகின்றனர். அந்த வகையில் இந்த வார கதையான பாரதி கண்ணம்மாவில் கண்ணம்மாவின் மாமனார் வேணு நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இதில் என்ன ஒரு சோகம் என்றால் இவர்கள் அனைவரும் சிட்டியிலேயே சிறந்த டாக்டரான பாரதியின் குடும்பத்தினராம். இதைக் கண்ட ரசிகர்கள் பாரதியும் ஒரு சைக்கோ தான் என்று கலாய்த்து வருகின்றனர்.
மருத்துவமனை காட்சிகளையே அதிகம் பார்த்து நொந்து போன ரசிகர்கள் உங்களுக்கு அடுத்த கான்செப்ட் கிடைக்கவில்லையா என்று புலம்புகின்றனர்.