புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விவாகரத்து பற்றி முதன் முறையாக மனம் திறந்த சமந்தா.. எல்லாத்துக்கும் நேரடி பதில் இதுதான்

நட்சத்திர ஜோடிகளான சமந்தா-நாக சைதன்யா இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்து செய்ய இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

நடிகை சமந்தா கிளாமராக நடிப்பதும், போட்டோ ஷூட் செய்வதுமே விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்று செய்திகள் வருகின்றன. மேலும் சமந்தா மும்பைக்கு இடம் பெயர போகிறார் மற்றும்  50 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு உள்ளார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாகவே நடிகை சமந்தா தனியாக திருப்பதியில் சாமி தரிசனம் செய்த செய்தார். நாகர்ஜுனா நடிகர் அமீர்கானுக்கு அளித்த விருந்தில் கூட சமந்தா கலந்து கொள்ளவில்லை. இது போன்ற பல செய்திகள் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் சம்பந்தப்பட்ட இருவரும் இதைப்பற்றி எவ்விதமான பதிலும் அளிக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் சமந்தா இவ்விதமான வதந்திகள்  தனக்கு மன வேதனையை அளிக்கிறது என்று கூறினார். தற்போது அவர் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடினார் அதில் தனது விவாகரத்து பற்றி மனம் திறந்துள்ளார்.

ஒரு ரசிகர் சமந்தாவிடம் நீங்கள் விவாகரத்து செய்யப்போவதாகவும், மும்பைக்கு குடிபெயர போவதாகவும் வரும் செய்திகளுக்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டார். அதற்கு சமந்தா இந்த வதந்தி எங்கிருந்து தொடங்கியது என்றே தெரியவில்லை இதற்கு முன்பு என்னைப் பற்றி வந்த வதந்திகளை போல் இதுவும்  உண்மை இல்லை. ஹைதராபாத் தான் என் வீடு, ஹைதராபாத் எனக்கு எல்லாவற்றையும் தருகிறது, நான் இங்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

samantha-naga-chaitanya-cinemapettai
samantha-naga-chaitanya-cinemapettai

இதன்மூலம் இத்தனை நாட்கள் பரபரப்பாக வெளிவந்த செய்திகள் எல்லாவற்றிற்கும் சமந்தா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவரின் இந்த பதிலை கேட்டு ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

Trending News