சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தப்புக் கணக்குப் போட்ட சன் தொலைக்காட்சி.. டிவி நிகழ்ச்சிகளிலும் ரன் அவுட்டான மாஸ்டர்

விஜய் தொலைக்காட்சி நடத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சி செம ஹிட். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் அனைவரும் நன்றாக செட்டில் ஆகி விட்டார்கள் என்றே கூறலாம். டிஆர்பி ரேட்டிங்கில் சக்கபோடு போட்ட இந்த நிகழ்ச்சி அனைத்து இல்லத்தரசி களையும் தன்வசம் ஈர்த்தது.

தற்போது இந்த நிகழ்ச்சியை போலவே சன் தொலைக்காட்சி நடத்திவரும் “Master Chef Tamil” நிகழ்ச்சி அந்த அளவிற்கு மக்களிடம் ரீச் ஆகவில்லை. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டு இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இதற்காக ஹைதராபாத்தில் பெரும் செலவு செய்து ஷூட்டிங் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி விஜய் சேதுபதியின் காஸ்டும்ஸ்காகவும் நிறைய செலவு செய்துள்ளனர். ஆனால் 20 சதவீத மக்களிடம் கூட இந்த நிகழ்ச்சி போய் சேரவில்லை என்று கூறுகின்றனர்.

Cook-Cinemapettai.jpg
Cook-Cinemapettai.jpg

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி. அவர் இந்த மாதிரி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு புதிது, அவருடைய நகைச்சுவை சென்ஸ் என்பது கொஞ்சம் கஷ்டப்படுகிறது. அதுமட்டுமின்றி நிகழ்ச்சியில் வரும் அனைவரும் தெரிந்த முகங்கள். எல்லோரும் அவர்களுக்கு என்று தனியாக யூடியூபில் சமையல் சேனலை நடத்துகிறார்கள். அதனால் இந்த நிகழ்ச்சி சற்று சுவாரசியம் கம்மியாக உள்ளது.

Master-chef-Cinemapettai.jpg
Master-chef-Cinemapettai.jpg

துக்ளக் தர்பார் , ஆனபல் சேதுபதி என்று சமீபத்தில் விஜய்சேதுபதி நடித்த நான்கு படங்கள் தொடர்ந்து ப்ளாப் ஆகி உள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியும் அந்த அளவிற்கு மக்களிடம் சேரவில்லை என்பது சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Trending News