விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் அண்ணன் தம்பி 4 பேரின் பாசப்பிணைப்புகளையும் கூட்டுக் குடும்பத்தின் மகத்துவத்தையும் வெளிப்படுத்துவதால் இந்த சீரியலுக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் உண்டு.
அந்த வகையில் சமீபத்தில் இந்த சீரியலில் அண்ணன் தம்பிகளின் அம்மாவாக நடித்த லக்ஷ்மி அம்மாவை நாடகத்தில் திடீரென்று இறந்துபோன சம்பவத்தை ஒரு வாரம் வரை ஒளிபரப்பானது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் லஷ்மி அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஷீலா யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில், பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து திடீரென்று வெளியேறியது பெரும் வருத்தத்தை அளித்துள்ளதாக தெரிவித்தார்.
அதன் பிறகு சமீபத்தில் ஷீலா அளித்துள்ள பேட்டியில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் செய்தி ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். ஏனென்றால் விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள புதிய சீரியல் ஒன்றில் கதாநாயகிக்கு அம்மாவாக நடிகை ஷீலா நடிக்கவுள்ளாராம்.
இந்த புதிய சீரியலில் கதாநாயகியாக சரண்யா துராட்டி நடிக்கப் போகிறார். நடிகை சரண்யா துராட்டி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பாண்டியன் ஸ்டோரில் திடீரென்று மறைந்த ஷீலாவை சரண்யா உடன் சேர்ந்து பார்ப்பதற்கு சின்னத்திரை இவர்கள் ஆரம்பத்துடன் காத்துள்ளனர்.