வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிக்பாஸ் பற்றி மட்டும் கேட்காதீங்க.. அந்த ஒரே காரணத்திற்காக விஜய் டிவியால் நிராகரிக்கப்பட்ட ஷகிலாவின் மகள் மிலா!

ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது நேற்று விஜய் டிவியில் கோலாகலமாக துவங்கப்பட்டது. எனவே பிக்பாஸ் சீசன்5இல் 18 பேர் பிக்பாஸ் வீட்டினுள் போட்டியாளர்களாக நுழைந்துள்ளனர். இதில் ஏழு போட்டியாளர்கள் மட்டுமே ஆண்களாகவும், மீதி உள்ள நபர்கள் அனைவரும் பெண்களாக இருப்பதால் இந்த சீசனிலும் பெண்களின் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது.

அதிலும் குறிப்பாக சுமார் 7 மாடல் அழகிகளை பிக்பாஸ் வீட்டினுள் விஜய் டிவி பக்கா ப்ளான் போட்டு அனுப்பியுள்ளனர். இந்த போட்டியாளர்களில் ரசிகர்கள் எதிர்பார்த்த ஷகிலாவின் மகள் மிலா மட்டும் இடம்பெறவில்லை.

இதுகுறித்து ஷகிலாவின் மகள் மிலாவிடம் கேட்டபோது, ‘பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி மட்டும் கேட்காதீர்கள்!’ என்று சலிப்புடன் பேட்டி ஒன்றின் மூலம் கூறியுள்ளார். அதன்பிறகு ரசிகர்களுக்கு ஷகிலாவின் மகள் மிலா பிக் பாஸ் செல்லாததற்கு காரணம் தற்போது கிடைத்துள்ளது.

sakeela-daughter-mila-cinemapettai
sakeela-daughter-mila-cinemapettai

பொதுவாக விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிகென்று ஒரு சில விதிமுறைகளை பின்பற்றுகிறது. அதனடிப்படையில் இந்த சீசனில் ஒரே ஒரு திருநங்கை போட்டியாளர் மட்டுமே பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமாம்.

எனவே மிலாவை விட நமிதா மாரிமுத்து திறமைசாலியாக இருந்ததால், நமிதா மாரிமுத்துவை பிக்பாஸ் குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர். ஏனென்றால் நமிதா மாரிமுத்து கடந்த 2014ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை போட்டியில் கலந்துகொண்ட டைட்டில் வென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர்  2015 மிஸ் கூவாகம், 2018 மிஸ் இந்தியா போன்றவை வென்றவர்.

milla-cinemapettai1
milla-cinemapettai1

மேலும் சமீபத்தில் ஷகிலாவின் மகள் மிலா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள கேமராவை முத்தம் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். எனவே இவர் கண்டிப்பாக இந்த சீசனில் ஒரு போட்டியாளராக மிலா இருப்பார் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளனர்.

Trending News