வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

அந்த நிர்வாண காட்சியை நம்பி சம்பளத்தை உயர்த்திய நடிகை.. படம் வெளிவந்தா தெரியும்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் அந்த நடிகை. ஆரம்பத்தில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கேற்றாற் போல் நடிகையும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தற்போது அந்த நடிகை நடிப்பில் பேய் படம் ஒன்று உருவாகியுள்ளது. இப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் தன் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என நினைத்த அந்த நடிகை இப்படத்திற்காக கோடியில் சம்பளம் பெற்றுள்ளாராம்.

அது மட்டும் அல்ல, அந்த படத்திற்காக இவர் நிர்வாணமாக நடித்த சூட் தான் சம்பள உயர்வுக்கு காரணமாம். இந்த அளவு ரிஸ்க் எடுத்து கலை தொண்டு படைக்கும் எனக்கு சம்பளம் கம்மியா குடுக்கலாமா என்று ஏத்தி விட்டாராம்.

அதுவரை தமிழ் திரையுலகில் வெறும் 70 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்று வந்த அந்த நடிகை பேய் படத்திற்காக அவர் சம்பளத்தை 1 கோடி ரூபாயாக உயர்த்தி விட்டாராம். இந்த படமும் படத்தின் இயக்குனர் மீதும் மிகுந்த நம்பிக்கை உள்ளது. நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என கூறி வரும் அந்த நடிகை இப்படம் வெளியாகும் முன்பே வெற்றி பெற்று விடும் என அவரது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்டார்.

இதுதவிர தன்னிடம் புதிதாக கதை சொல்ல வரும் இயக்குனர்கள் நடிகையிடம் சம்பளம் எவ்வளவு என்று கேட்டால், ஒரு கோடி வேண்டும் என்று கேட்கிறாராம். அதை கேட்கும் இயக்குனர்கள் சம்பளத்தை சற்று குறைக்க முடியுமா என கேட்டால் நடிகை பயங்கர டென்ஷனாகி விடுகிறாராம்.

படமே இன்னும் வெளியாகல அதுக்குள்ள இவ்ளோ அலப்பறையா என இயக்குனர்கள் கடுப்பாகி வருகிறார்கள். அதுமட்டுமின்றி இப்படம் வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தால் நடிகை என்ன செய்வார் என்றும் படம் வெளியாவதற்கு முன்பே ஏன் இவ்வளவு சீன் போடுகிறார் எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News