தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த டாப் 10 இயக்குனர்களின் முதல் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதல் படத்திலேயே வெற்றி கிடைக்குமா என்ற பதட்டத்தில் வெளியான படங்களின் மொத்த லிஸ்ட். ஒரு முன்னணி நடிகராக இருக்கும் போதே இயக்குனர்கள் மீது நம்பிக்கை வைத்து கைப்பிடித்து தூக்கிவிட நடிகர்களும் கோலிவுட்டில் நிறைய பார்க்கலாம்.
கே எஸ் ரவிக்குமார்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்தான் கேஎஸ் ரவிக்குமார். இவருடைய திரைப்படங்கள் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய திரைப்படங்களில் ஒரு சில காட்சியில் அவரே தோன்றி நடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்.1990 இல் ஆர்பி சௌத்ரி தயாரிப்பில் குறைவான செலவில் 30 நாட்களில் எடுக்கப்பட்ட திரைப்படம் புரியாத புதிர். இதுவே கேஎஸ் ரவிக்குமாரின் முதல் படம். இப்படத்தில் ரகுவரன், ரகுமான், சரத்குமார், ரேகா, சித்தாரா என பலர் நடித்திருந்தார்கள்.
ஷங்கர்: பிரம்மாண்டம் என்றாலே இயக்குனர் ஷங்கர் தான். அவருடைய படத்தில் பிரம்மாண்டமும், தொழில்நுட்ப அருமையும், சமூக மாற்றத்தின் கருத்துக்களை உள்ளடக்கிய அவரது படங்கள் இருக்கும். ஷங்கர் எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவர் இயக்கிய முதல் படம் 1993 இல் ஜென்டில்மேன் திரைப்படம்.
இப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம் ஃபேர் அவார்ட் மற்றும் தமிழ்நாடு தேசிய விருதும் கிடைத்தது.
மணிரத்னம்: மணிரத்னம் இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை என பன்முகத்தன்மை கொண்டவர். இவருடைய திரைத் துறையின் பங்களிப்பை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கி இவரை கௌரவித்தது. மணிரத்தினம் தமிழில் இயக்கிய முதல் திரைப்படம் இதயக்கோயில். இப்படத்தில் மோகன், ராதா, அம்பிகா, கவுண்டமணி என பலரும் நடித்திருந்தார்கள். இவருடைய மௌனராகம், நாயகன், தளபதி, ரோஜா, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
சுந்தர் சி: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ரஜினி-கமல் என உச்ச நட்சத்திரங்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். சிம்பு சீன் படங்கள் குடும்ப சித்திரங்கள், காமெடி, ஆக்சன், பல பரிமாண கொண்ட படங்களை இயக்கியுள்ளார். அரண்மனை அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 என பேய் படங்களை இயக்கி அதில் முக்கிய கதாபாத்திரத்தில் அவரே நடித்து வருகிறார். 1995 இல் முறைமாமன் என்ற படத்தை சுந்தர் சி முதல்முறையாக இயக்கியிருந்தார்.
பாலா: பாலுமகேந்திராவை எப்படி மறக்க முடியாதோ அதுபோல பாலா தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற ஒவ்வொரு சில முக்கியமான இயக்குநர்களில் பாலாவும் ஒருவர். இயக்குனர் பாலா கவிஞர் அறிவுமதியின் கவிதை கருவாக கொண்டு தன்னுடைய முதல் படமாக சேது படத்தை இயக்கினார் . இப்படத்தில் விக்ரம், அபிதா, சிவகுமார், என பலரும் நடித்துள்ளனர். சேது திரைப்படம் சிறந்த வட்டார மொழி திரைப்படம் என சில்வர் லோட்டஸ் விருது வாங்கியது.
ஏ ஆர் முருகதாஸ்: பல பிளாக்பஸ்டர் மூவி தமிழ் சினிமாவிற்கு தந்தவர் தான் ஏ ஆர் முருகதாஸ். எல்லாம் இயக்குனர் காட்டிலும் இவருடைய திரைப்படங்கள் தனித்தன்மை வாய்ந்த இருக்கும். இவருடைய திரைப்படங்கள் சமூகப் பிரச்சினையை உள்ளடக்கியதாக இருக்கும். ஏ ஆர் முருகதாஸ் இன் முதல் படம் தீனா. இப்படத்தில் இரக்க குணமுடைய சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்துடைய ரவுடியின் கதை. திருந்தி வாழ நினைக்கும் ரவுடியை இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதை இக்கதை பிரதிபலிக்கிறது. இப்படத்தில் அஜித், லைலா நக்மா, சுரேஷ்கோபி என பலரும் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
செல்வராகவன்: தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்கியவர் செல்வராகவன். 2002இல் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் திரைக்கதையை செல்வராகவன் எழுதி இருந்தார். இப்படத்தில் ஷெரின், அபிநய், தலைவாசல் விஜய், சில்பா, விஜயகுமார் என பலர் நடித்திருந்தார்கள். அதன்பிறகு தனுஷை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களை இயக்கியிருந்தார்.
கௌதம் வாசுதேவ் மேனன்: கௌதம் மேனன் ஸ்டைலான ஃபிலிம் மேக்கிங் இன் தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்துள்ளார். இவருடைய படங்களை அதிக ஆங்கில வசனங்கள் இடம் பெற்றிருக்கும்,ஆனால் படத்தின் தலைப்பை தூய தமிழில் வைத்திருப்பார். இவரது படங்கள் விமர்சன ரீதியாக மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றுள்ளது. கௌதம் மேனன் இயக்கிய முதல் திரைப்படம் மின்னலே. இப்படத்தில் மாதவன், அப்பாஸ், ரீமாசென், விவேக், நாகேஷ் என்ன பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இவர் இயக்கிய முதல் படமே மிகப்பெரிய வெற்றியடைந்தது.
வெங்கட் பிரபு: வெங்கட்பிரபு இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன். இவர் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர், நடிகர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர். 2007இல் எஸ்பிபி சரண் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படம் சென்னை 600028. இப்படத்தில் கிரிக்கெட் விளையாட்டை நகைச்சுவையாக எடுத்திருப்பார்.இப்படத்தில் 11 புதுமுக நடிகர்களை களமிறங்கி இருந்தார். இப்படம் அதிக விமர்சனம் பெற்றதுடன் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
அட்லி: இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லி. 2013 பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ராஜா ராணி திரைப்படம் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சத்யராஜ் நடித்திருந்தார்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததோடு தமிழ்நாடு தேசிய விருது மற்றும் எடிசன் விருதை பெற்றார் அட்லி. பிறகு விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கியிருந்தார்.