வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

215 படங்களில் நடித்தும், அஜித் பட வாய்ப்பை இழந்த நடிகர்.. அவரே கூறிய ஷாக்கான காரணம்

தமிழ் சினிமா துணை நடிகராக நடித்து வருபவர் மீசை ராஜேந்திரன். அவருடைய பெரிய மீசையின் காரணமாக மீசை ராஜேந்திரன் என்று அவர் அழைக்கப்பட்டார். தமிழைத் தவிர பிற மொழிகளிலும் நடித்துள்ள இவர் இதுவரை 215 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதில் 180 திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1987இல் வெளிவந்த கலைஞர் அவர்களின் கதை, வசனத்தில் வெளிவந்த ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் இவர் முதன்முதலாக நடித்துள்ளார்.

அதில் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை தாக்கும் ஏழு பேரில் ஒருவராக கிளைமாக்ஸ் காட்சியில் நடித்துள்ளார். மேலும் ரமணா திரைப்படம் தான் இவரை நடிகராக அடையாளப்படுத்தியது. அதைத்தொடர்ந்து சாமி, பிதாமகன், நான் கடவுள் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

நடிகர் அஜித் நடித்த திருப்பதி திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர் தெலுங்கு படம் ஒன்றிற்காக மீசையை எடுத்த காரணத்தால் அந்த பட வாய்ப்பு கைநழுவி போய்விட்டது.

அதன் பிறகு 15 வருடங்களாக எந்த ஒரு காரணத்திற்காகவும் மீசையை எடுக்கவில்லை என்றும் மீசை ஒன்றே எனது அடையாளமாக தற்போது கருதப்படுகிறது  என ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

meesai-rajendran
meesai-rajendran

Trending News