ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பிரபஞ்சத்தின் அழகிக்கு ரூட்டு விடும் ராஜு.. பிக்பாஸில் ஆரம்பமான அடுத்த லவ் ட்ராக்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கடந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது வாழ்க்கையைப் பற்றி ஒரு கதையை சக போட்டியாளர்கள் இடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் சொல்லும் கதைக்கு மற்ற போட்டியாளர்கள் லைக், டிஸ்லைக், ஹாட் போன்ற இமோஜிகளை கொடுப்பார்கள்.

எனவே நேற்று மட்டும் மாடல் அழகி அக்ஷரா, விஜே பிரியங்கா, சிபி ஆகிய மூவரும் தங்களது கதையை சொல்லி முடித்தார்கள். அந்த வகையில் இந்த டாஸ்க்கின் தொடக்கத்திலிருந்தே, யார் எந்த கதை சொன்னாலும் அந்த கதையில் குறையை கண்டு பிடிக்கும் கண்ணோட்டத்தில் இருக்கும் பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் அவர்களின் சிஷ்ய பிள்ளை ராஜு, இதுவரை யாருக்கும் மனதார லைக் கொடுக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கடந்த 2019ஆம் ஆண்டு பிரபஞ்சத்தின் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல் அழகி அக்ஷரா செல்ல கதைக்கு ராஜு லைக் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த சக போட்டியாளர்கள் கிசுகிசுத்தனர். உடனே பிரியங்கா ராஜீவை அழைத்து, சின்ன பொண்ணு அக்கா கதை சொல்லும்போது அவர்களின் குழந்தை தூக்கக்கலக்கத்தில் பஸ்சில் இருந்து கீழே உருண்டு சென்றது என சொன்னபோது அதில் சுவாரசியம் குறைந்தது என குற்றம் சாட்டினாயே, இப்போது மட்டும் அக்ஷரா சொல்ல கதையில் சுவாரசியம் இருந்ததா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு ராஜு வசதியாக வளர்ந்த ஒரு பெண் தனது கதையை, இதைவிட எப்படி சொல்ல வேண்டும் என்று மழுப்பினார். இதை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் இந்த சீசனுக்கான முதல் காதல் டிராக் தொடங்கிவிட்டது என்று ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

அதன்பிறகு ராஜு அக்ஷராவிடம், ‘நீ என்னை ரசிப்பது. நான் கதை சொல்வதை கவனமாக கேட்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால்தான், நீ சொன்ன கதைக்கு நான் லைக் கொடுத்தேன்’ என்று கூறினார்.

akshara-cinemapettai
akshara-cinemapettai

உடனே அக்ஷரா மற்ற எல்லோரும் இரக்கப்பட்டு லைக் கொடுப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் எனக்கு டிஸ்லைக் கொடுத்தீர்கள் என்று நினைத்தபோது, லைக் கொடுத்தது மிகவும் சந்தோஷத்தை அளித்தது’ என்று ராஜுவும் அக்ஷராவும் தனியாக அமர்ந்து பேசினார்கள். உலக அழகி என நினைத்து உள்ளூர் கிழவியிடம் சிக்கி விட்டாயே என ராஜு பாய் கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

Trending News