புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நாகசைதன்யா வாழ்க்கையில் கபடி ஆடிய 3வது நபர்.. சமந்தாவுடன் என்ன உறவு.?

சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக திகழ்வார்கள் என்று பலரும் எதிர்பார்த்த நாகசைதன்யா-சமந்தா தம்பதியர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தற்போது விவாகரத்து செய்து கொள்ளும் முடிவில் உள்ளன. இதற்கு காரணம் என்ன என்பதை நாகசைதன்யாவும் சமந்தாவும் வெளிப்படையாக குறிப்பிடவில்லை.

இதனால் சமூக வலைத்தளங்களில் அவர்களுடைய ரசிகர்கள் இஷ்டத்துக்கு காரணத்தை கண்டுபிடித்து பரப்புகின்றனர். அந்த வகையில் சமந்தா நடத்தி வரும் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் டிசைனர் ரீத்தம் ஜுகல்கர் என்பவர் தான், சமந்தா மற்றும் நாகசைதன்யாவிற்கு இடையே குழப்பத்தை உருவாக்கிவிட்டார்.

ஏனென்றால் சமந்தாவிற்கும் அந்த டிசைனர் ரீத்தம் ஜுகல்கர் என்பவருக்கு தகாத உறவு இருந்ததாகவும், சோசியல் மீடியாவில் தொடர்ந்து வதந்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து டிசைன் ரீத்தம் ஜுகல்கர் கூறியபோது, சமந்தா என்னுடைய சகோதரி போன்றவர். அப்படி இருக்கும்போது எங்கள் இருவரையும் தொடர்புபடுத்தி பேச எப்படி உங்களால் முடிகிறது.

எங்களுக்கு இடையே இருக்கும் உறவு முறையை பற்றி நாகசைத்தன்யாவிற்கு நன்றாகவே தெரியும். ஆகையால் தயவு செய்து உண்மை என்ன என்பதை தெரியாமல், வதந்திகளை பரப்பாதீர்கள்.

மேலும் நாகசைதன்யா இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவை பற்றி மீடியாவில் சொல்லாமல் இருப்பதே எனக்கு வருத்தத்தை அளிப்பதாகவும் டிசைனர் தெரிவித்துள்ளார்.

samantha-designer-cinemapettai
samantha-designer-cinemapettai

மேலும் தற்போது சமந்தாவும் அந்த டிசைனர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தில், சமந்தா அவருடைய கழுத்தை இருக்கி கட்டி பிடித்தபடி இருக்கும் புகைப்படமும் சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

Trending News