பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் சினிமா பையன் என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் அபிஷேக் ராஜா கதை சொல்கிறேன் என்ற பெயரில் இஷ்டத்திற்கு அடிச்சு விட்டிருக்கிறார். அவர் தன்னுடைய சொந்த சோகக் கதையைச் சொல்லும் பொழுது கோபம், ஆக்ரோஷம், கண்ணீர் என ஏகப்பட்ட முக பாவனையில் பகிர்ந்து கொண்டது.
அபிஷேக் உடைய கதையை கேட்டால் அவருடைய அப்பாவின் கதை எல்லாம் எனக்கு தேவையா? என்று சக போட்டியாளர் ராஜுவே கிண்டல் அடித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்றுதான் பிக்பாஸ் ரசிகர்களும் அபிஷேக் சொன்ன கதையை வைத்து சமூக வலைதளங்களில் கிண்டல் அடித்ததுக் கொண்டிருக்கின்றனர்.
ஏனென்றால் அபிஷேக் தன்னுடைய அப்பாவின் மரணத்தை சென்டிமென்டாக கூறவேண்டும் என்ற கோணத்தில் பகிர்ந்து கொள்ளும்போது, தன்னுடைய அப்பாவின் ஆவி உடலில் இருந்து வெளியேறி அம்மாவிற்கு சென்றதை கண்கூடாகப் பார்த்ததாக கூறினார்.
இந்த சம்பவத்தை தான் ரசிகர்கள் சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தில் வரும் காமெடி வசந்தமான ‘இன்னும் நீ எல்லாம் பைத்தியம் நீ நெனச்சிட்டு இருக்கல’ என்று மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் அபிஷேக்கை பங்கம் செய்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் அபிஷேக் கோரிப்பாளையத்தில் புல்லட் ஒட்டிய கதையை வைத்து, கர்ணன் பட சிவாஜி ரேஞ்சுக்கு நடிக்கிறான் என்றும் கலாய்த்துள்ளனர்.
எனவே யூடியூப்பரான அபிஷேக் ராஜாவின் ஒரிஜினல் முகத்திரை கொஞ்சம் கொஞ்சமாக கிழிந்தது கொண்டிருக்கிறது என்று பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.