திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விறுவிறுப்பாக தனது அடுத்த படத்தை முடித்த லிங்குசாமி.. ஹீரோ யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ரன், ஆனந்தம், பையா, சண்டைக்கோழி போன்ற பல வெற்றி படங்களை வழங்கியவர் தான் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் இறுதியாக இவர் இயக்கத்தில் வெளியான அஞ்சான், சண்டைக்கோழி 2 போன்ற படுதோல்வியை சந்தித்ததால், படங்களை இயக்குவதில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் முதன் முறையாக நேரடி தெலுங்கு படம் ஒன்றை இயக்குவதன் மூலம் லிங்குசாமி மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். தெலுங்கில் பிரபலமாக வலம் வரும் நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் உப்பென்னா பட புகழ் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி இப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் ஆதி நடித்து வருகிறார். தமிழில் மிருகம், அய்யனார், ஈரம், மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக கலக்கிய ஆதிக்கு தெலுங்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. எனவே இப்படத்தில் வில்லனாக நடிக்க அதிக சம்பளத்திற்கு ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ள நிலையில் நடிகர் ஆதி சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

linguswami-aadhi
linguswami-aadhi

இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் நடிகர் ராம் பொத்தினேனிக்கு சண்டை காட்சி ஒன்றின் பயிற்சியின் போது கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். எனவே வில்லனாக நடிக்கும் ஆதியின் காட்சிகள் மட்டும் முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முழுவதுமாக முடிவடைந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.

Trending News