திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

12 கிலோ உடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாறிய அமலாபால்.. செம வைரல்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் தான் அமலாபால். வரிசையாக தெய்வத்திருமகள், தலைவா போன்ற வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.

அதன்பிறகு இவர் தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்தும் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் திக்குமுக்காடி கொண்டிருந்த அமலாபாலுக்கு மீண்டும் ஆடை படம் கை கொடுத்தது என்றே கூறலாம்.

இந்த படத்தில் இவர் துளியும் ஆடை இல்லாமல் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதன் மூலம் இவருக்கு பல சர்ச்சைகள் வந்தாலும் ரசிகர்கள் ஆடை படத்தின் நடிப்பை பார்த்து அமலாபாலை வெகுவாக பாராட்டினர்.

ஒரு நல்ல பெண்ணாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அமலா பால் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. சமீபகாலமாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை மட்டுமே தான் வெளியிட்டு வருகிறார்.

amala paul
amala paul

ஆனால் தற்போது அமலாபால் உடல் எடையை  12 கிலோ குறைத்து ஸ்டைலிஷாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அமலாபால் அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர். தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

amala paul
amala paul

மேலும் அமலாபாலுக்கு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் பெண்கள் மையாமாக உள்ள கதைகளில் மட்டுமே நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவருக்கு ஒரு சில படங்கள் நடைபெற வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News