வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அண்ணாத்த படத்தில் ரஜினியின் பெயர் இதுதான்.. என்ன சாமி பேர வச்சிட்டீங்க!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வருகின்ற தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

முன்னதாக அண்ணாத்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. இதனால் கண்டிப்பாக ரஜினியின் மற்ற படங்களை விட அண்ணாத்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய உச்சத்தை தொடும் எனவும் படக்குழுவினர் பெரும் நம்புகின்றனர்.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பழைய ஜோடிகளான மீனா, குஷ்பு ஆகியோர் நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பிபி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஸ் என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிகை உள்ளது.

அண்ணாத்த படத்தில் ரஜினியின் பெயர் அண்ணாத்த என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் உண்மையில் அந்த படத்தில் ரஜினியின் பெயர் கணேசன் என வைக்கப்பட்டுள்ளதாம். இந்த தகவல் அண்ணாத்த படத்தின் வட்டாரத்திலிருந்து கசிந்துள்ளது.

annatte-movie-poster-fanmade
annatte-movie-poster-fanmade

மேலும் அண்ணாத்த படம் ரஜினியின் கேரியரில் மிக முக்கியம் படமாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் கடைசியாக ரஜினி நடித்த சில படங்கள் சரிவர வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் அரசியல் சர்ச்சைகளிலும் சிக்கினார். இது எல்லாவற்றையும் மறக்கடிக்க அண்ணாத்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Trending News