முன்னணி நடிகர் ஒருவர் பிரபல நடிகையின் பிடியில் இருப்பதாக ஒரு செய்தி கோலிவுட் வட்டாரங்களில் வெளியாகி செம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்த அவரது படங்களில் அந்த நடிகைக்கு சிபாரிசு செய்வது வருவதற்கான காரணத்தை கண்டுபிடித்து விடலாம் கோலிவுட் வட்டாரம்.
நம்ம ஊரில் அவ்வளவு எளிதில் நடிகைகள் முன்னணி நடிகையாக மாறிவிட முடியாது. ரசிகர்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் அந்த நடிகைகளிடம் இருந்தால் மட்டுமே அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.
இல்லையென்றால் எப்படிப்பட்ட பேரழகியாக இருந்தாலும் நோ தான். அப்படி ரசிகர்களின் ஏகபோக வரவேற்ப்பை பெற்று டாப் நடிகையாக இருப்பவர் கடந்த சில வருடங்களாக பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறார். மார்க்கெட்டும் நிலையாக இல்லை.
இருந்தபோதும் அந்த முன்னணி நடிகரின் படத்தில் எப்படி தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது என்ற சந்தேகம் கோலிவுட் வட்டாரத்தில் நெருங்க அதுகுறித்து விசாரணையில் ஏகப்பட்ட தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் ஒரு படத்தில் சேர்ந்து நடித்த போது அந்த நடிகைக்கும் நடிகருக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாம்.
அதன் பிறகுதான் தொடர்ந்து 5 படங்களில் ரசிகர்கள் சலிப்படையும் அளவுக்கு ஜோடி போட்டனர். இனிமேலும் வந்த நடிகர் நடிக்கும் படங்களில் அந்த நடிகைக்கு தான் வாய்ப்பு என்கிறார்கள். இனிமேலும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்காது என நடிகர் எவ்வளவோ சொல்லியும் நடிகை கேட்பதாக தெரியவில்லை.