புதன்கிழமை, ஜனவரி 15, 2025

20 வருடங்களுக்கு முன்பே அஜித்துடன் நடித்த பிரேமம் பட பிரபலம்.. வைரலாகும் போடோஸ்

உச்ச நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் அல்டிமேட் ஸ்டார் அஜீத் குமாரை ரசிகர்கள் தல என்று அன்புடன் தலையில் தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடித்த தீனா திரைப்படமே இவருக்கு தல என்ற பெயரை பெற்றுதந்தது.

ஏஆர் முருகதாஸ் இயக்கிய தீனா திரைப்படத்தில் நடிகர் அஜித்குமாரின் நடிப்பு ரசிகர்களையும், தமிழ் திரை உலகினரையும் வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தின் மூலம்தான் ஏ ஆர் முருகதாஸ் இயக்குனராக அறிமுகமானார்.

தல என்றாலே ரசிகர்களுக்கு முதலில் தோன்றுவது தீனா திரைப்படமே.அந்த அளவிற்கு தீனா திரைப்படத்தில் இடம்பெறக்கூடிய சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள், கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் இடையில் நடக்கக்கூடிய ரொமான்ஸ் காட்சிகள் என அனைத்து காட்சிகளும் மிக அருமையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

தீனா திரைப்படத்தில் தல அஜித்திடம் சில ரவுடிகள் வம்பு செய்து அடி வாங்கும் காட்சியில் தற்போது பிரபலமாக இருக்கும் பலரும் இடம்பெற்றுள்ளன. அதில் குறிப்பாக பிரேமம் படத்தை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இருந்துள்ளார்.

theena-cinemapettai
theena-cinemapettai

தற்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய சினிமா பயணத்தை தமிழ் சினிமாவில் இருந்து தொடங்கியது தற்போது தெரியவந்துள்ளது. அத்துடன் அல்போன்ஸ் புத்திரன் தமிழில் பல குறும்படங்களை இயக்கியது மட்டுமல்லாமல், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருக்கிறார்.

எனவே அவர் தீனா படத்தில் தல அஜித்துடன் இருக்கும் புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் அவருடைய ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

Trending News