திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தேடிப்போய் வாய்ப்பு கொடுத்த தனுஷ்.. நாசுக்காக முடியாது எனக் கூறிய 18 வயது நடிகை

தனுஷ் நடிப்பில் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட திருச்சிற்றம்பலம் படத்தை முடித்து விட்டதாக தகவல் வெளியானது. அதன் பிறகு மாறன் எனும் படத்தில் முழு முயற்சியில் ஈடுபட்டு நடித்து வருவதாக கூறி வருகின்றனர்.

தனுஷ் ஏராளமான படங்கள் நடித்து வந்தாலும் அனைத்து படங்களுக்கும் சரியான கால்ஷீட் கொடுத்து அதனடிப்படையில் படங்கள் நடித்து வருகிறார். இதனால் படத்தின் இயக்குனர்களும் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் கால்ஷீட்டை முடித்து விடுகின்றன.

பியார் பிரேமா காதல் படத்தை எடுத்த இளன்னுடன் இணைந்து தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளதாக கூறி வருகின்றனர். மேலும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பதற்கு கீர்த்தி ஷெட்டிடம் இடம் கேட்டுள்ளனர்.

ஆனால் கீர்த்தி ஷெட்டி எந்த ஒரு பதிலும் கூறாமல் மற்ற படங்களில் நடித்து வந்துள்ளார். இதனால் தனுஷ் நேரடியாக கீர்த்தி ஷெட்டிக்கு போன் செய்து தனது படத்தில் நடிப்பதற்கு உங்களுக்கு விருப்பமா மேலும் படத்தின் கதையை உங்களுக்கு பிடித்துள்ளதா என கேட்டுள்ளார்.

தனுஷ் அவர்களிடம் எந்த ஒரு பதிலும் உறுதியாக கூறாமல் தற்போது பல படங்கள் நடித்து வருகிறேன் கால்சீட் சரியாக அமைந்தால் கண்டிப்பாக படத்தில் நடிக்கலாம் என நாசுக்காக கூறியுள்ளார். ஆனால் தற்போது வரை எந்த ஒரு பதிலும் உறுதியாக கூறாமல் இருப்பது பார்க்கும்போது தனுஷ் படத்தில் நடிப்பதற்கு கீர்த்தி ஷெட்டிக்கு விருப்பமில்லை என கூறி வருகின்றனர்.

keerthy-shetty
keerthy-shetty

மேலும் இனிமேல் தனுஷ் போன் செய்தாலும் கீர்த்தி ஷெட்டி எடுப்பாரா என்பது சந்தேகம் தான் என சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கிண்டலாக கூறி வருகின்றனர்.

Trending News