சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கதை எழுதி, நடித்தும் கெடுத்த 2 காமெடியன்ஸ்.. தோல்வியை சந்தித்த அஜித், சூர்யா படங்கள்

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு திரைக்கதை மிகவும் முக்கியம். ஒரு நடிகர் எவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும் படத்தின் கதை சிறப்பாக இருந்தால் மட்டுமே வெற்றி பெறும். இந்த வகையில் ஒரு படத்தின் கதையை எழுதி அதில் நடித்து அந்தப் படத்தின் தோல்விக்கு காரணமாக இருந்த இரண்டு நபரை பற்றி இப்போது பார்ப்போம்.

ரமேஷ் கண்ணா – தமிழ் சினிமாவில் பிரண்ட்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை கேரக்டரில் நடித்தவர் ரமேஷ் கண்ணா. இவர் தமிழில் ஒரு சில படங்களையும் இயக்கியுள்ளார். அவர் விக்ரமன், கே எஸ் ரவிக்குமார் போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆதவன். இந்தத் திரைப்படத்தின் கதையை ரமேஷ் கண்ணா எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் அவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதாவது நயன்தாராவை ஒரு தலையாக காதலிக்கும் இளைஞர் போன்று நடித்து இருப்பார். அவருடைய வயதிற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும் இந்த கதாபாத்திரம். அதில் அவருடைய நடை, உடை அனைத்தும் இளைஞர் போன்று காட்ட பெரும் முயற்சி செய்திருப்பார். இதுவே படத்தின் மிகப்பெரிய பலவீனம் ஆக இருந்தது. ஒரு நல்ல கதையை நடித்துக் கெடுத்த பெருமை இவருக்கு உண்டு.

யூகி சேது – பஞ்சதந்திரம் அன்பே சிவம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் யூகி சேது. நடிப்பு மட்டுமல்லாமல் தொகுப்பாளர், கதை ஆசிரியர் போன்ற பல திறமைகளைக் கொண்டவர். நடிகர் அஜித் இரு வேடங்களில் நடித்த அசல் திரைப்படத்தின் கதையை யூகிசேது எழுதியுள்ளார்.

அத்துடன் இந்தப் படத்தில் டான் சம்சா என்ற நகைச்சுவை கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதற்கு இந்த படத்தின் திரைக்கதையும் ஒரு காரணம்.

Trending News