புதன்கிழமை, ஜனவரி 15, 2025

புனித் ராஜ்குமார் மறைவை கேட்டு தற்கொலை செய்த ரசிகர்கள்.. எத்தனை பேரு தெரியுமா?

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகனான புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால் கன்னட திரையுலகினரும் கன்னட மக்களும் பெரும் துயரத்தில் இருந்தனர். யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக கன்னட முழுவதும் போலீசாரால் அனைத்து இடங்களிலும் பாதுகாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

புனித் ராஜ்குமாரின் மறைவை கேட்டு பிரபலங்கள் தாண்டி மக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்த அந்த அளவிற்கு இவரது மறைவை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் இவரது நல்ல குணத்திற்கும் பழகும் எண்ணத்திற்கும் இவர் நீடூழி வாழ வேண்டும் என்பது தான் பலருடைய ஆசையாக இருக்கிறது.

புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் விக்ரம் மருத்துவமனை முன்பு பெருவாரியாக திரண்டு சோகத்தில் இருந்தனர். மேலும் மருத்துவமனையிலிருந்து புனித் ராஜ்குமார் இறந்த செய்தி கேட்ட உடன் அனைத்து ரசிகர்களும் கண்ணீர் மல்க அழுதனர்.

puneeth rajkumar fans feeling
puneeth rajkumar fans feeling

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்த புனித் ராஜ்குமார் மறைந்ததை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் ஒரு சில ரசிகர்கள் அதனை தாங்க முடியாமல் அழுது வருகின்றனர். ஆனால் புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகர்களான முனியப்பன் மற்றும் பரசுராம் ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஏற்கனவே புனித் ராஜ்குமாரின் மறைவை தாங்க முடியாமல் இருக்கும் கன்னட மக்களுக்கு இந்த துயரமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு பல தரப்பிலிருந்தும் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். புனித் ராஜ்குமார் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவரது செயலும் புகழும் என்றும் நிலைத்து நிற்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

Trending News