திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இனியும் விளையாடலைனா பெட்டியை கட்ட வேண்டியதுதான்.. 2 வாரிசு நடிகர்களுக்கு கடைசி வார்னிங் கொடுத்த கமல்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எலிமினேஷன் நடைபெறும். அந்த வகையில் இதுவரை நமீதா மாரிமுத்து, நாடியா சாங், அபிஷேக் ராஜா இவர்களது வரிசையில் இந்த வாரம் சின்ன பொண்ணு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், தொடங்கப்பட்ட வாரத்தில் இருந்தே ஒவ்வொரு முறையும் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் சின்ன பொண்ணு கடந்த இரண்டு வாரங்களாக கடைசி நிமிடம் காப்பாற்றப்பட்டு, இந்த வாரம் மாட்டிக்கொண்டார்.

சின்னபொண்ணு எலிமினேஷன் செய்யும்போது, அவருடன் அபினை மற்றும் வருண் ஆகிய 2 பேரும் கடைசி நிமிடம் காப்பாற்றப்பட்டனர். அப்போது கமல், அபினை மற்றும் வருண் இருவரையும் பிக் பாஸ் வீட்டில் உங்களுடைய பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளது.

bb5-cinemapettaijh
bb5-cinemapettaijh

குறிப்பாக அபினையை பிக்பாஸ் வீட்டில் உங்களுடைய குரல் ஒலிக்க வேண்டும். ஜெமினி கணேசன் மற்றும் சவுத்திரி அவர்களின் பேரனாக, உங்களுடைய குடும்பத்தினரின் ரசிகனான எனக்கும் மக்களுக்கும் உங்களை பிக்பாஸ் வீட்டில் முழுமையாக உங்களை வெளிப்படுத்துங்கள் என்று அபினையை பார்த்து கமல் கூறினார்.

அத்துடன் வருணையும் பிக்பாஸ் வீட்டில் யோசித்து யோசித்து விளையாடாமல் உங்களை முழுமையாக வெளிப்படுத்துங்கள் என்றும் கமல் கடைசியாக வார்னிங் கொடுத்தார்,

எனவே இனிவரும் நாட்களில் வாரிசு நடிகர்களான வருண் மற்றும் அபினை போட்டியை விருவிருப்புடன் கொண்டுசெல்ல ஏதாவது செய்வார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News