வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கர்ணனாக மாறிய ராஜா ராணி சரவணன்.. உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. இத்தொடரில் சரவணன், சந்தியா கதாபாத்திரங்களில் சித்து, ஆல்யா நடித்துள்ளார்கள். இதில் மாமியாரிடம் நல்ல பெயர் வாங்க போராடும் மருமகளாக ஆல்யா நடித்துள்ளார். ஆரம்ப எபிசோடுகளில் மிகவும் மந்தமாக இருந்த ராஜா ராணி 2 தொடர் தற்போது பல புதிய திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக செல்கிறது. இத்தொடரில் சரவணன் இனிப்பு கடை வைத்துள்ளார்.

சென்னையில் நடக்க உள்ள சமையல் போட்டியில் சரவணன் கலந்து கொள்ள சந்தியா ஆசைப்படுகிறார். பல போராட்டங்களுக்குப் பிறகு வீட்டில் அனைவரிடமும் சம்மதம் வாங்கி சரவணன், சந்தியா இருவரும் சென்னை செல்கிறார்கள். அங்கு வெளியூர்களில் இருந்து நிறைய போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இப்போட்டியில் வெற்றி பெற முடியுமா என்ற அச்சத்தில் சரவணன் உள்ளார்.

இப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. அப்பணத்தை வைத்து சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு போட்டியாளர்கள் தமக்கு தேவையான பொருட்களை எடுக்கும்பொழுது சரவணனிடம் ஒரு நபர் வந்து தன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, மருந்து வாங்க பணம் இல்லை என்கிறார்.

இதனால் சரவணன் கையில் உள்ள பணத்தை கொடுத்து அவருக்கு உதவி செய்கிறார். மீதமுள்ள பணத்தில் குறைவான பொருட்களை வாங்கி வருகிறார். அந்தக் குறைவான பொருள்களைக் கொண்டு சமையல் செய்கிறார். நடுவர்கள் சரவணன் செய்த உணவை சுவைக்க வரும்போது, தொகுப்பாளர் இவருக்கு கொடுத்த பணத்தை வேறு ஒருவருக்கு உதவி செய்துள்ளார் என்கிறார்.

இதனால் நடுவர்கள் இங்கு நல்லா சமைத்தவர்களுக்கு தான் பரிசு, நல்ல மனசுக்கு இல்லை என்கிறார்கள். இதனால் சந்தியாவும், சரவணன் கவலையில் உள்ளார்கள். ஆனால் குறைந்த பொருட்களை கொண்டு, சுவையான சமையல் செய்துள்ளார் என சரவணனுக்கு தான் பரிசு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ரொமான்ஸ் காட்சி வைத்து கதையை நகர்த்தி வந்த இயக்குனர், தற்போது கதையை மாற்றியதால்  சொதப்பி வருகிறார். இந்தப் ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா என கதறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News