வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கண்ணனுக்காக மீனா எடுக்கும் ரிஸ்க்.. பாண்டியன் ஸ்டோரில் வெடிக்கப் போகும் பிரச்சனை

ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களை தருவதில் விஜய் டிவி எப்போதும் முதலிடம் தான். அந்த வகையில் ஒட்டுமொத்த குடும்பத்தின் மனங்களைக் கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். மகிழ்ச்சியான கூட்டுக் குடும்பத்தில் வாழும் அண்ணன் தம்பிகளின் கதைக் களத்தை மையமாகக் கொண்டதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

கடைசி தம்பியான கண்ணனின் காதல் திருமணத்தால் குடும்பத்தில் மிகப் பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் இல் நீண்ட வருடங்களுக்கு பிறகு தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது . தற்போது அந்தக் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா விமர்சையாக நடைபெறுகிறது.

மூர்த்தியின் அம்மா, அப்பா பெயரை இணைத்து குழந்தைக்கு லஷ்மி பாண்டியன் என்று பெயர் சூட்டப்படுகிறது. பெயர் சூட்டு விழா முடிந்தவுடன் மீனா வெளியே வருகிறார். எதிர் வீட்டில் உள்ள கண்ணனும், ஐஸ்வர்யாவும் மீனாவிடம் வந்த குழந்தையின் பெயரை கேட்கிறார்கள். கண்ணன் குழந்தையை பார்க்க வேண்டும் என்று மீனாவிடம் சொல்கிறான்.

வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது யாருக்கும் தெரியாமல் குழந்தையை பின்புறம் தூக்கிச் செல்கிறார் மீனா. கண்ணன் குழந்தையை பார்த்து மகிழ்ச்சியில் கொஞ்சுகிறார். சிறிது நேரம் கழித்து எல்லோரும் குழந்தையை தேடுகிறார்கள்.

pandiyan-store-meena
pandiyan-store-meena

 

தனம், மீனாவிடம் தான் குழந்தை இருப்பான் எல்லோரும் பதட்டப்படாதீர்கள் என்கிறாள். கண்ணனும், மீனாவும் மூர்த்தியிடம் மாட்டிக் கொள்வார் என்பதை பார்க்க அடுத்த எபிசோடு வரை காத்திருக்க வேண்டும்.

- Advertisement -

Trending News