திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

தொடர்ந்து வெளியேறும் சீரியல் நடிகைகள்.. டிஆர்பி-யில் தடுமாறும் பிரபல சேனல்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி, சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை பவித்ரா ஜனனி. அதற்குப் பிறகு அதே சேனலில் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் ஹீரோயினாகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இதில் பவித்ரா,மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டார். சில நாட்களுக்கு முன்னர் ஈரமான ரோஜாவே சீரியல் முடிவுக்கு வந்தது. தற்போது பவித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து எண்ணை தொடும் சீரியலில் அபிநயா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் இந்த சீரியலில் நடிக்க மறுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த பவித்ராவிற்கு அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது. அதன் காரணமாகவே பவித்ரா சீரியலை விட்டு விலகுவதாக தெரிகிறது.

ஏற்கனவே விஜய் டிவியில் நடித்த ரோஷினி, ரச்சிதா மகாலட்சுமி போன்ற நடிகைகள் சினிமா வாய்ப்பை காரணம் காட்டி சீரியலில் இருந்து விலகியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது பவித்ராவும் இணைந்துள்ளார். அடுத்தடுத்து ஹீரோயின்களின் வெளியேற்றத்தால் விஜய் டிவிதான் சற்று சறுக்கலை சந்திக்கும் நிலையில் உள்ளது.

இந்த சினிமா வாய்ப்பு பவித்ராவிற்கு ஒரு முன்னேற்றமாக இருந்தாலும் அவருடைய ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெற முடியும் என்பதைப் போல பவித்ராவும், பிரியா பவானி சங்கர், வாணி போஜன் வரிசையில் பெரிய திரையில் நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள்.

pavithra-janani
pavithra-janani

Trending News