வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அந்த அஜித் படம் மாதிரி ஒரு படம் வேணும்.. இயக்குனருக்கு கட்டளையிட்ட விஜய்

ஆரம்பத்தில் குடும்ப கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த தளபதி விஜய் துப்பாக்கி படத்திற்கு பிறகு பெரும்பாலும் கமர்சியல் படங்களை ஓரம் கட்டிவிட்டு ஸ்டைலிஷ் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் அவரது படங்களில் அரசியலும் அதிகம் பேசப்பட்டது குறிப்பிட வேண்டிய ஒன்று.

தற்சமயம் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தாலும் முன்னர் போல் அவரது படங்கள் இல்லை என்பது அவரது ரசிகர்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயம். முன்னரெல்லாம் படத்தில் காமெடி நடிகர்களை தேவை இல்லை எனும் அளவுக்கு விஜய் தன்னுடைய நகைச்சுவை திறமையால் அனைவரையும் டாமினேட் செய்து விடுவார்.

ஆனால் இப்போதெல்லாம் ஏதாவது ஒரு அரசியல் கருத்தை மையமாக வைத்து அதை சுற்றி படத்தின் திரைக்கதையை எழுதி விஜய்யின் தனித் தன்மையை அழித்து விட்டனர் சமீபத்திய இயக்குனர்கள். பெரும்பாலும் விஜய் அப்படிப்பட்ட படத்தில்தான் நடிக்க விரும்புகிறார் என ஒருபக்கம் கிளப்பி விட்டதால் வந்த வினை தான் இது.

தமிழ் சினிமாவில் அரைத்து சலித்து புளித்துப்போன கதைகளை வைத்து இன்னமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்து கொண்டு தான் இருக்கின்றனர். அந்த வகையில் சிறுத்தை சிவாவை குறிப்பிட்டுச் சொல்லலாம். இன்றைக்கும் தங்கச்சி சென்டிமென்ட் அம்மா சென்டிமென்ட் அப்பா சென்டிமென்ட் என வெறும் சென்டிமென்டை மட்டும் மையமாக வைத்து தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் அண்ணாத்த போன்ற இரண்டு படங்களும் வசூல் ரீதியாக டாப் ரேட்டிங்கில் இருக்கின்றன. இதையெல்லாம் கவனித்து வரும் தளபதி விஜய் தன்னுடைய அடுத்த படமான தளபதி 66 படத்தில் கண்டிப்பாக ஃபேமிலி சென்டிமென்ட் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

மேலும் அது போன்ற கதைதான் எனக்கு வேண்டும் எனவும் விசுவாசம் படத்தை போல் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படி அந்த படம் இருக்க வேண்டும் எனவும் தெலுங்கு இயக்குனர் வம்சி உத்தரவிட்டுள்ளார். வம்சியும் சென்டிமென்ட் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் என்பதால் அஜித் சிறுத்தை சிவா போல விஜய்க்கு வருங்காலத்தில் வம்சி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது சினிமா வட்டாரம்.

Trending News