வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

10 வயதில் பிக்பாஸ் பிரபலங்களின் புகைப்படம்.. அண்ணாச்சி உங்கள பார்த்தாலே காமெடியா இருக்கு

விஜய் டிவியின் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது 50 நாட்களை எட்ட உள்ளது. இந்நிலையில் போட்டியாளர்களின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கானா பாடகியான இசைவாணியின், இப்போது இருப்பதை விட சிறுவர்களின் செம க்யூட்டாக இருக்கிறார். அதேபோல் ஒரு திரைப்பட நடிகராகவும் தொகுப்பாளராகவும் நகைச்சுவை நடிகராக விளங்கி மேலும் அரசியல்வாதியாகவும் கலக்கி வருகிறார் இமான் அண்ணாச்சி. இவர் 1968ல் தூத்துக்குடியில் பிறந்தவர். தற்பொழுது இவரின் சிறுவயது புகைப்படமும் கிடைத்துள்ளது. தற்போது கருகருவென இருக்கும் இமான் அண்ணாச்சி 10 வயதில் வெள்ளை வெளேர் என்று இருக்கிறார்.

அடுத்தபடியாக அடுத்த போட்டியாளர் வருண். ஐசரி வேலனின் பேரன் வருண். ‘ஒருநாள் இரவில்’ படத்தின் மூலம் திரைப்பட நடிகராக அறிமுகமானார். மேலும் இவர் போகன் படத்திலும் நடித்துள்ளார். இவரின் சிறுவயது புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதில் இவர் சிறுவயதில் உள்ளது போல அச்சு அசலாக இப்போதும் இருந்து வருகிறார்.

அதைத்தொடர்ந்து விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான நம்பர் 1 பெண் தொகுப்பாளராக இருந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. கர்நாடகத்தில் பிறந்தவர். இவரின் சிறுவயது புகைப்படமும் வெளியாகி ரசிகர்களை பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர்களைத் தொடர்ந்து அடுத்த போட்டியாளர் அபிநய். இவரின் சிறுவயது புகைப்படமும் முழுவதுமாக அடையாளமே தெரியாத அளவிற்கு உள்ளது. இவர் விஜய சாமுண்டீஸ்வரி அவர்களின் மகனும், சாவித்திரி ஜெமினி கணேசன் அவர்களின் பேரனும் ஆவார்.

bb5-photos-cinemapettai
bb5-photos-cinemapettai

அடுத்ததாக உலக அழகி பட்டத்தை வென்ற அக்ஷரா ரெட்டி தற்பொழுது பிக்பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக கலக்கி வருகிறார். மேலும் இவர் சென்னையை சேர்ந்தவர். மாடலிங் துறையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இவரின் இயற்பெயர் ஷ்ரவ்யா. இவரின் சிறுவயது புகைப்படமும் அச்சு அசலாக அவர் தற்பொழுது இருப்பது போலவே வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைப்போல் மிகவும் சிறப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது விளையாடி மக்களின் மனங்களை அதிகம் கொள்ளை கொண்டு வருபவர் ராஜூ ஜெயமோகன். இவர் ஒரு எழுத்தாளர், திரைப்பட நடிகர் மேலும் பல சின்னத்திரை சீரியலிலும் நடிகராகவும் பல பரிமாணங்களை கொண்டு திகழ்கிறார். இவரின் சிறுவயது புகைப்படமும் இவர் இப்பொழுது இருப்பது போலவே அப்படியே இருக்கிறது.

அடுத்தபடியாக நாடகக் கலைஞராகவும் நாட்டுப்புற பாடகியாகவும் இருப்பவர் பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர் தாமரைச்செல்வி. இவர் தற்பொழுது அட்டகாசமாக விளையாடி வரும் நிலையில் இவரின் சிறுவயது போட்டோவும் வெளியாகி இணையத்தை அசத்தி வருகிறது.

அதைத் தொடர்ந்து அடுத்த போட்டியாளர் சிபி புவனச் சந்திரன். இவர் திரைப்பட நடிகராக அறிமுகமான படம் ‘வஞ்சகர் உலகம்’. அதை தொடர்ந்து இவர் பிளாக்பஸ்டர் மூவியான ‘மாஸ்டர்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து கலக்கியிருப்பார். இவரின் புகைப்படமும் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Trending News