வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

41 வயதிலும் நச்சுனு புகைப்படம் வெளியிட்ட லைலா.. இப்பவும் அப்படியே இருக்கீங்க

விஜயகாந்த் ஜோடியாக கள்ளழகர் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் லைலா. தன்னுடைய குட்டி கண்களாலும், அழகிய சிரித்தாலும் பல ரசிகர்களை கட்டிப்போட்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் நடித்துள்ளார். இவர் முதலில் ஹிந்தி சினிமாவில் தான் அறிமுகமானார். லைலா கோவாவில் 1980ஆம் ஆண்டு பிறந்தார்.

முன்னணி நடிகர்களான விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகிய நடிகர்களுக்கு லைலா ஜோடியாக நடித்துள்ளார். அள்ளித்தந்த வானம், உன்னை நினைத்து, கம்பீரம், கள்ளழகர், தோசத்தின் ஆனந்தா, பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன் முதல்வன் போன்ற படங்களிலும் இவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

லைலா விக்ரமுடன் இணைந்து நடித்த தில் படத்தில் இவர் செய்யும் குல்ஃபி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனால் இவர்களது ரசிகர்கள் குல்ஃபி லைலா என்று அழைத்தார்கள். லைலா 2002ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதை நந்தா திரைப்படத்திற்காக வாங்கினார். மேலும், இவர் 2004 ஆம் ஆண்டு பிதாமகன் படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வாங்கினார்.

laila
laila

லைலா, மெஹ்தி என்பவரை எட்டு வருடம் காதலித்து நிச்சயதார்த்தம் ஆகி நான்கு ஆண்டுகள் கழித்து 2006 இல் இவர்களுக்கு திருமணம் ஆனது. இவர்களுக்கு இப்போது இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நான் நடிக்கப் போவதில்லை என லைலா கூறியிருந்தார். அதேபோல் லைலா திரைப்படங்களில் நடிக்காமல் பிள்ளைகளைப் கவனித்து வந்தார்.

laila
laila

தற்போது லைலா நீண்ட இடைவெளிக்குப்பின் அலிசா என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் வித்தியாசமான பேய் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் கூட லைலா இன்னும் மாறவில்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Trending News