சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சாமி பட வில்லன் பெருமாள் பிச்சை ஞாபகம் இருக்கா.? நிஜத்தில் தெரியாத சுவாரஸ்யங்கள்

திரையுலகில் ஹீரோக்களுக்கு கிடைப்பதை போல் வில்லன்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஆனால் ஒரு சில வில்லன் கதாபாத்திரங்கள் தங்கள் நடிப்பு மூலம் அந்த வரலாற்றை மாற்றி எழுதி வருகிறார்கள். அதில் மிகவும் முக்கியமான வில்லன் நடிகர் தான் பிரபல நடிகர் .

படங்களில் இவரின் கதாபாத்திர பெயர்களே வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் இவரை கோட்டா சீனிவாச ராவ் என்று அழைப்பதைவிட சனியன் சகடை, பெருமாள் பிச்சை என்ற பெயர் தான் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரீட்சயமாக உள்ளது. அந்த அளவிற்கு இவர் அந்த கேரக்டரில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார் என்று தான் கூற வேண்டும்.

கோட்டா சீனிவாச ராவின் தந்தை சீதா ராம ஆஞ்சநேயலு ஒரு மருத்துவராம். ஆரம்பத்தில் கோட்டா சீனிவாச ராவும் மருத்துவராக வேண்டும் என்று தான் நினைத்திருந்தாராம். ஆனால் நடிப்பு மீது இருந்த ஆர்வம் காரணமாக சினிமா பக்கம் திரும்பி விட்டாராம். கல்லூரி நாட்களில் நிறைய நாடகங்களில் நடித்துள்ள கோட்டா சீனிவாச ராவ் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தான் நடித்து வந்தாராம்.

கல்லூரி படிப்பை முடித்த கோட்டா சீனிவாச ராவ் ஆந்திராவில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் மேனேஜராக பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் சினிமா மீது உள்ள ஆசையால் வேலையை உதறிவிட்டு நடிக்க வந்து விட்டாராம். நடிகர் விக்ரம் மற்றும் இயக்குனர் ஹரி கூட்டணியில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த சாமி படம் தான் கோட்டா சீனிவாச ராவுக்கு தமிழில் முதல் படமாகும்.

முதல் படத்திலேயே இவரது நடிப்பு பாராட்டை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2005ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி படத்தில் சனியன் சகடை என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டரும் இவருக்கு நல்ல பெயரையே பெற்று தந்தது. வில்லன் மட்டுமல்லாமல் குணச்சித்திரம், நகைச்சுவை உள்ளிட்ட பல வேடங்களிலும் இவர் நடித்து அசத்தியுள்ளார்.

இதுதவிர கடந்த 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஆந்திர பிரதேச விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராகவும் கோட்டா சீனிவாச ராவ் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிப்பு அரசியல் என இரண்டிலும் கலக்கிய கோட்டா சீனிவாச ராவ் சிறந்த வில்லன், குணச்சித்திர நடிகர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். பத்ம ஸ்ரீ உள்ளிட்ட உயரிய விருதுகளையும் பெற்றுள்ள கோட்டா சீனிவாச ராவ் ஒரு சிறந்த நடிகர் என்பது மறுக்க முடியாத உண்மை.

Trending News