வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பிரசவத்திற்கு பின் ஒரு வாரத்திலே நடிக்க வந்த வில்லி.. கிரிமினல் மைண்ட் மாத்தூங்க ப்ளீஸ்

பல அதிரடி திருப்பங்களுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் வெண்பா என்ற கேரக்டரில் வில்லியாக மிரட்டி வருபவர் நடிகை பரீனா. இவர் சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பம் அடைந்த செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்தார்.

அதோடு தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்களையும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து விட்டதால் இனி சீரியலில் பரீனா தொடர்ந்து நடிப்பாரா என்று ரசிகர்கள் சந்தேகித்து வந்தனர்.

சீரியலிலும் இவருடைய கதாபாத்திரம் ஜெயிலுக்கு செல்வது போன்று காண்பிக்கப்பட்டது. ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கேரக்டர் கண்ணம்மா வாக  நடித்து வந்த ரோஷினி சீரியலில் இருந்து விலகினார் அவருக்கு பதில் மாடலும், நடிகையுமான வினுஷா தேவி தற்போது நடித்து வருகிறார்.

அதனால் வெண்பா கேரக்டரையும் மாற்றி விட்டால் என்ன செய்வது என்று ரசிகர்கள் குழம்பித் தவித்தனர். இந்நிலையில் அனைவரது சந்தேகத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பரினா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார்.

அதில் அவர், உங்களுடைய அன்பிற்கும் வாழ்த்துக்கும் நன்றி. நானும் குழந்தையும் நலமுடன் இருக்கிறோம். இது ஒரு சுகப்பிரசவம், நான் விரைவில் திரும்பி வருவேன் என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் பரினா பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து தான் விலகவில்லை என்பதை தெரிவித்துள்ளார். இதனால் சந்தோஷம் அடைந்த ரசிகர்கள் மீண்டும் வில்லியாக மிரட்ட வரும் வெண்பாவை காண ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

Trending News